Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 29, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 29, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஏப்ரல் 29 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய வழிகாட்டி ஒருவரை இன்று சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்று சக ஊழியர்களிடம் இருந்து தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், உங்களைச் சுற்றியுள்ள பொறாமைக்காரர்களை தவிர்த்து தனியாக செயல்படவும். அதே சமயம், வாடிக்கையாளர்கள் மற்றும் உறவுகள் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தவும், நம்பிக்கையை பெறவும் இது சரியான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - பெய்ஜ்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1

தானம் - இன்று மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மிகவும் உணர்ச்சிகரமான நாள். ஆகவே, இன்று உங்கள் மனம் கவனியுங்கள். ஷாப்பிங் செய்வதற்கு மிக அருமையான நாள் இதுவாகும். குடும்ப வாழ்க்கையில் சாதூர்யத்தையும், நேரடி விவாதத்தையும் கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அன்புரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். வீடு திரும்புகையில் மகிழ்ச்சியான முகத்துடன் வரவும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தேவையற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் மறந்து விட்டு, இன்றைய நாளை சிறப்புக்குரியதாக மாற்றுவதற்கு உண்மையை பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் பழகவும், அவர்களை ஈர்க்கவும் இன்று சிறப்பான நாள் ஆகும். உயர் கல்வி படிப்பவர்கள், நடனம், சமையல், டிசைனிங், நடிப்பு, ஆசிரியர் அல்லது ஆடிட்டர் ஆகிய பணிகளை செய்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குகம் தானம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஏராளமான குழப்பங்கள் முடிவுக்கு வருவதால் உங்களுக்கு நல்ல தெளிவு கிடைக்கும். எதிர்கால இலக்குகளை திட்டமிடவும், அதை செயல்படுத்தவும் இன்று சிறந்த நாள் ஆகும். ஆகவே நிகழ் காலத்தை நினைத்து வருந்த வேண்டாம். பெரும்பாலான நேரத்தை கவுன்சிலிங் மற்றும் மார்க்கெட்டிங் சார்ந்து செலவிட வேண்டியிருக்கும். குடும்ப உறவிலும் எந்த சிக்கலும் இருக்காது. நண்பர்களுடன் நேரம் செலவிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்கள் தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டும் கிடைக்கும். உங்கள் முடிவுகளை முறியடிக்கும் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். முதலீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு லாபம் தரக் கூடும். இன்டர்வியூ மற்றும் காதலை வெளிப்படுத்துதல் போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு முன்பாக செய்து முடிக்கவும். சொத்து சார்ந்த இன்று எடுக்கப்படும் முடிவுகள் பலன் அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றவர்களுக்கு பச்சை நிற பழங்கள் கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எண்ணத்திற்கும், செயல்பாட்டிற்கும் இடையே இன்று வேறுபாடுகள் இருக்கும். பழைய பொறுப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நாள் இது. குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வணிகம் சார்ந்த வெற்றிகரமான முடிவுகளை எடுக்கும் புத்திகூர்மை உங்களுக்கு இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நிற நாணயம் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒரு ஹீரோவைப் போல செயலாற்றி, வேலையை தக்க சமயத்தில் முடிப்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் மூத்தவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்தவித சமரசங்களையும் செய்து கொள்ளாதீர்கள். உங்கள் முடிவுகளில் திடமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் வெண்கலம் அல்லது காப்பர் பாத்திரங்களை தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் துடிதுடிப்பான குணம் மற்றும் அறிவு ஆகியவையே பலரை உங்களுக்கு பிடித்தமானவர்களாக மாற்றுவதற்கு போதுமானது. எனினும், வணிகம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு நல்ல விவாதம் தேவை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், உலோக உற்பத்தியாளர்கள், சாஃப்ட்வேர் டெவலப்பர்கள் போன்றோர் முதலீடு செய்வதை சவாலாக செய்யலாம். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி தானமாக கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு குழுவோடு இணைந்து செயல்படவும். புதிய இடத்திற்கு குடிபெயர்ந்து செல்பவர்கள், புதிய வேலைக்கு செல்ல இருப்பவர்கள், இடம் வாங்க நினைப்பவர்கள், கல்விக்காக வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு சிறந்த நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக வழங்கவும்.

ஏப்ரல் 29 அன்று பிறந்த பிரபலங்கள் : ராஜா ரவி வர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, அல்லா ரக்கா, ஜேம்ஸ் ப்ரூக், அஜீத் ஜோகி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி