திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்...
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசிகள் வரும். இந்த 12 மாதமும் வருகின்ற ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தசமி முதல் நாளே பூஜைக்குரிய துளசியை பறித்து வைக்க வேண்டும். இன்றைய தினத்தில் துளசியை பறிப்பதால் பாவம்.
அதாவது ஏகாதசிக்கு முந்தைய நாள் தசமி திதியாகும். இன்றைய தினம் விரதத்தை தொடங்கி ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசியன்று விரதத்தை முடிப்பார்கள். இதுவே ஏகாதசி விரத முறையாகும்.
விரதம் இருக்கும் முறை
முதல் நாளே வீடெல்லாம் சுத்தம் செய்து விட வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து விட்டு தசமி அன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால்,பழம், துளசி, துளசி தண்ணீர், இவற்றை பெருமாளுக்கு படைத்து விட்டு அதை உண்ணலாம்.
மறுநாள் காலை துவாதசியன்று சூரிய உதயத்திற்கு முன் அனைத்து காய்கறிகளையும் வைத்து சமைக்க வேண்டும். இதில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்ட வத்தல், முக்கியமாக இடம் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இறைவனுக்கு படைத்து விட்டு நாமும் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இதை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும். இதுவே ஏகாதசிக்கு உரிய விரதம் முறைகளாகும்.
இது ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை ஏகாதசி(சுக்ல பட்ச ஏகாதசி), தேய்பிறை ஏகாதசி (கிருஷ்ண பட்ச ஏகாதசி), இரண்டிலும் இதை கடைப்பிடிக்கலாம். முடியாதவர்கள் வருடம் ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்றாவது இந்த விரதத்தை மேற்கொள்வதால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்ப்பிக்கை...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.