ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இன்று புரட்டாசி வெள்ளி பிரதோஷம்... சிவனை வணங்கினால் சுக்கிர யோகம் நிச்சயம்

இன்று புரட்டாசி வெள்ளி பிரதோஷம்... சிவனை வணங்கினால் சுக்கிர யோகம் நிச்சயம்

சிவன்

சிவன்

Purattasi Pradhosam | திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. அதிலும் புரட்டாசி மாதம் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்று புரட்டாசி வளர்பிறை வெள்ளி பிரதோஷம் ஆகும். 

சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது. திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. அந்த வகையில் இன்று புரட்டாசி வளர்பிறை பிரதோஷம் ஆகும். இந்த நாளில் சிவனை வணங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே வளர்பிறை பிரதோஷம் ஆகும். இதை பட்ச பிரதோஷம் என்றும் கூறுவர். இந்தத்திதியில் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

மேலும் இந்த திரயோதசி திதியில் சிவாலயத்தில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. அப்போது பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் தரிசிப்பதால் ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன.

இன்று புரட்டாசி வெள்ளி கிழமை பிரதோஷம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் பிரதோஷம் வருவது, கடன், தரித்திரம் முதலான பொருளாதாரச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நீக்கும் என்றும் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

புராணக்கதை

பிரதோஷத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷவேளை. வளர்பிறை பிரதோஷம் , தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம்.

Also see... பிரதோஷத்தின் வகைகளும்... அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்...

வழிபடும் முறை:

அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

வழிபாட்டு பலன்கள்:

1. பால் வழிபாடு: நீண்ட ஆயுள்

2. தயிர் வழிபாடு: நிம்மதி

3. பஞ்சாமிர்தம்: செல்வம் பெருகும்

4. நெய்: முக்தி பேறு கிட்டும்

5. இளநீர்: நல்ல மக்கட் பேறு கிட்டும்

6. சர்க்கரை: எதிர்ப்புகள் மறையும்

7. எண்ணெய்: சுகவாழ்வு

8 .சந்தனம்: நல்லது நடக்கும்

9. மலர்கள்:தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும்

10. தேன்: தீராத பிரச்சனைகளுக்கும் தீரும்

First published:

Tags: Purattasi, Sivan