இன்று சனிப்பெயர்ச்சி கிடையாது..! சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் விளக்கம்

சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

இன்று சனிப்பெயர்ச்சி கிடையாது..! சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் விளக்கம்
சனிப்பெயர்ச்சி
  • News18
  • Last Updated: January 24, 2020, 7:57 AM IST
  • Share this:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி கிடையாது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாமென கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி இன்றா அல்லது வரும் டிசம்பர் 27ம் தேதியோ என்பதில் சோதிடர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. ஜோதிடர்கள் எப்போதுமே இரண்டு வகையான பஞ்சாங்கத்தைப் பின்பற்றி பலன்களை கணித்து வருகின்றனர்.

ஒன்று திருக்கணித பஞ்சாங்கம், மற்றொன்று வாக்கிய பஞ்சாங்கம். அந்தவகையில் முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்றும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 27ம் தேதியும் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தனிப்பட்ட ஜாதகப்படி சனிப்பெயர்ச்சி இன்று தொடங்கும் எனவும் ஆனால் சனீஸ்வரருக்கான பரிகார பூஜைகள் டிசம்பர் 27ம் தேதிதான் நடைபெறும் என கூறுகிறன்றனர் சிலர்.


இந்நிலையில் நாகை மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி என வெளியாகிய செய்தி முற்றிலும் தவறானது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டிசம்பரில்தான் சனீஸ்வர பகவான் தனுச ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்றும் ஆகவே சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading