ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இன்று நாக சதுர்த்தி விரதம்... விநாயகரை வணங்கினால் சர்ப்ப தோஷம் நீங்குமாம்...

இன்று நாக சதுர்த்தி விரதம்... விநாயகரை வணங்கினால் சர்ப்ப தோஷம் நீங்குமாம்...

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான்.  ஆனாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியிலும் விநாயகரை வணங்கலாம். வழிபடாலம்.

நாகத்தையே பூணூலாக அணிந்து கொண்டிருக்கும் விநாயகப்பெருமானே! உனக்கு நமஸ்காரம் என்கிறது விநாயக அஷ்டோத்திரம். பல வகையான ஒளியின் பிரகாசங்களும் சேருகிற திருநாளே தீபாவளி. அதாவது பல வகை ஒளிப் பிரகாசச் சக்திகள் பூலோகமெங்கும் ஒளி, ஒலி வடிவில் தோன்றுகிற வலிமைமிக்க திருநாள். இதன் பிறகு வரும் சதுர்த்தி விரதம் ஐப்பசி மாத நரகச் சதுர்த்தசி நாளாகும்.

அந்த வகையில் இன்றைய தினம் 08.11.2021 நாக சதுர்த்தசி. இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் யாவும் விலகும்!.  மேலும் இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பலன்கள்

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ தாக்குதலில் இருந்து விடுபடலாம். இதனால் திருமண தடை, குழந்தைபேறு போன்ற தடைகளில் இருந்து விடுபடலாம்.

புராணக்கதை

ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப் பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அதுவே நாகசதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி.

மேலும் படிக்க... வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தங்கள் விருப்பம் போல் நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள். விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள்.

இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 27 நட்சத்திரகாரர்களுக்கான காயத்ரி மந்திரங்கள்...

First published:

Tags: Ganesh Chaturti, Temple