• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்று கார்த்திகை பெளர்ணமி... சிவபெருமானை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குமாம்...

இன்று கார்த்திகை பெளர்ணமி... சிவபெருமானை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குமாம்...

சிவன்

சிவன்

Karthigai Pournami | இன்று கார்த்திகை மாதம் பெளர்ணமி. வெள்ளிக்கிழமை நாளன்று பெளர்ணமி வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபட்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

  • Share this:
    தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை. இன்று திருவண்ணாமலையில் அகண்ட தீபம் ஏற்றப்படும். இது மகா தீபம் என்று அழைக்கப்படுகிறது. பெளர்ணமி, அமாவாசை திதிகள் இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பெளர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன.

    கார்த்திகை மாத பெளர்ணமி நாளான இன்று விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பெளர்ணமி அன்று அம்மையையும் அப்பனையும்  நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

    கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முழு நிலவு நாள் கார்த்திகை பெளர்ணமி. இதை திரிபுராரி பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இன்று நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பதால், இன்று தானம் வழங்குவதற்கான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    மேலும் படிக்க... Pournami : பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

    ஒளி வடிவாக இறைவனை வழிபடும் நாளான கார்த்திகை பவுர்ணமியன்றுதான், பிரம்மாவும், விஷ்ணுவும், ஐயன் சிவபெருமானின் அடி-முடி காணாமல் இவதும், இறைவனை தீபத்தின் வழியாக அழைப்பதாகும்.

    மேலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்த நாளை திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலையில் மகா தீபமாக ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

    மேலும் படிக்க... Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?

    பலன்கள்

    கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் . இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். இதனால் நாம் செய்த பாவங்கள அனைதும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... 

    பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன? 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன? 

    பெளர்ணமி அன்று கேட்க வேண்டிய ஸ்லோகம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: