இன்று தீபாவளி அமாவாசை... என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
இன்று தீபாவளி அமாவாசை... என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
அமாவாசை
தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவது தவறில்லை என்றும் தீபாவளி அமாவாசை கணக்கில்லை என்றும் ஒரு சிலர் இன்று அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள். கோலமிடுவார்கள். ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல என்று ஆச்சாரிய பெருமக்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. அந்த தீபாவளி நன்னாளில், அமாவாசை விரதம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல் முதலான வழிபாட்டை செய்வது நல்லது. அது நம்மையும் நம் குடும்பத்தையும் முன்னுக்கு வரச் செய்யும் முக்கியமான வழிபாடாகும்.
முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். நம் குடும்பத்தில் இறந்துவிட்ட முன்னோர்களை தொடர்ந்து வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது நனதுதர்ம சாஸ்திரம். ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்தநாளில், மறக்காமல் முன்னோர்களை வணங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டும் எனவும் நமது வீட்டு பெரியவர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
இன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசை. தீபாவளித் திருநாள். துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளில், தீப ஒளித்திருநாளில், முன்னோர்களை வணங்குவோம். தர்ப்பணம் முதலான சடங்கு சாங்கியங்களைச் செய்வோம். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்வது நல்லது.
முடிந்தால், இன்று நம் முன்னோர்களை நினைத்து, அருகில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பது, உணவு அளிப்பது என தான தர்மங்கள் செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறும் எனபது நம்பிக்கை.
தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவது தவறில்லை என்றும் தீபாவளி அமாவாசை கணக்கில்லை என்றும் ஒரு சிலர் இன்று அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள். கோலமிடுவார்கள். ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல என்று ஆச்சாரிய பெருமக்கள் கூறுகின்றனர். அமாவாசை எப்போது வந்தாலும் சரி, சுத்தமாக குளித்துவிட்டு நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்பணங்கள் வழிபாடுகள் என அனைத்தையும் செய்திட வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. கோலமிடுதலும் கூடாது. அமாவாசைக்கு மறுநாள் அல்லது முதல் நாளே அசைவம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.