Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 3, 2022) உங்கள் வியாபாரம் பொருளாதார ரீதியாக வளரும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 3, 2022) உங்கள் வியாபாரம் பொருளாதார ரீதியாக வளரும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 3) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

வெளிநாட்டு முதலீடுகள் லாபகரமாக இருக்கும். துணி வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்குக் கிடைக்கும்.

ரிஷபம்:

வியாபாரம் சிறக்கும். வணிகம் சார்ந்த பணிகள் சிறப்பாக இருக்கும். வேலையில் மாறுதல்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பயணம் செய்யும் திட்டம் நிறைவேறலாம். உங்கள் தந்தையிடமிருந்து நிதி உதவி கிடைக்கும்.

மிதுனம்:

உங்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்றைய முதலீடுகள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு நன்மை தரும். நெருங்கிய நண்பருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் மூதாதையர் சொத்து மூலம் உங்களுக்கு செல்வம் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

கடகம்:

நீங்கள் கூட்டு வியாபாரத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம், அது வணிகம் மிகவும் லாபகரமாக இருக்கும். உலோகம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற பயணங்கள் உங்கள் பட்ஜெட்டை பாதிக்கலாம்.

சிம்மம்:

தொழிலதிபர்களுக்கு இன்று சுமாரான தினம். இன்று நீங்கள் எந்த வணிகத்திலும் முதலீடு செய்யக்கூடாது. இல்லையெனில், நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் உதவி பெறுவது சாதகமான பலன்களைத் தரும். நாளுக்கு நாள் செலவுகள் அதிகரிப்பது உங்கள் கவலைகளை அதிகரிக்கலாம்.

கன்னி:

இயந்திர வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீண்ட நாள் கைக்கு வராமல் இருக்கும் பணத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால்,  புதிய முயற்சியைத் தொடங்க நினைப்பீர்கள். நிலம் சம்மந்தப்பட்ட வேலைகளில் பண இழப்பு ஏற்படும்.

துலாம்:

உங்கள் வியாபாரம் பொருளாதார ரீதியாக வளரும். இன்று உங்கள் கனவு வீட்டை வாங்குவதற்குத் திட்டமிடலாம். உங்கள் செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தாருடன் பழகும் நேரம் குறையும். வீட்டுச் செலவுகளும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு உணவு தொடர்பான தொழில்கள் நல்ல லாபம் தரும். நீங்கள் ஒரு நண்பருக்கு பண உதவி செய்ய நேரிடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பணம் கொஞ்சம் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நெருங்கிய நபருடன் உங்களுடைய உறவில், பணம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பாதிக்கப்படலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பண உதவி கிடைக்கும். முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும். தினசரி வருமானம் பாதிக்கப்படும். தனியார் தொழில்களும் இன்று சிறு நஷ்டத்தை சந்திக்கலாம்.

மகரம் :

நீங்கள் ஒரு துணி வியாபாரியாக இருந்தால் உங்கள் நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். இன்று நீங்கள் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அம்மாவின் வழியில் பண உதவி கிடைக்கும். உங்கள் வருமானம் குறித்து கவலை ஏற்படலாம். நெருங்கிய நண்பரின் உதவியால் பணம் கிடைக்கலாம்.

கும்பம்:

இன்று உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நிறைய செலவு செய்வீர்கள். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். முறையான வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருக்கும். கூட்டுத் தொழில்கள் சிறப்பாக நடக்கும். நெருங்கிய ஒருவருடன் உண்டாகும் எதிர்பாராத பயணம் உங்கள் பட்ஜெட்டை தீவிரமாக பாதிக்கும்.

மீனம்:

இன்று வருமானம் திருப்திகரமாக இருக்காது. நெருங்கிய நண்பரிடம் கூட கடன் வாங்க நேரிடலாம். பயணங்களால் நஷ்டம் ஏற்படும், வருமானம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி