முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 26, 2022) தொழில் வருமானம் சிறப்பாக இருக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 26, 2022) தொழில் வருமானம் சிறப்பாக இருக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 26) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைய தினம் சாதகமாக இருக்கும்; முடிக்காமல் நிலுவையில் இருக்கும் அவசர வேலைகளை சிரமமின்றி இன்று முடிக்கலாம். பரஸ்பர நம்பிக்கையின் பேரில், குடும்ப உறவுகள் வலுவடையும். வருமானம் சிறப்பாக இருக்கும்; பண வரவு உண்டாகும். வெற்றியை விரைவாக அடைய வேண்டும் என்று உங்களுக்கு பொருந்தாத செயல்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டாம்.

  ராசியான எண்: 8 ராசியான நிறம்: பழுப்பு

  பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்.

  ரிஷபம்:

  இன்று மிகவும் அற்புதமான நாளாகும்; குடும்ப உறுப்பினரால், உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும், வாய்ப்புகளையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு இன்று அதிக லாபம் கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

  ராசியான எண்: 3 ராசியான நிறம்: வெளிர் மஞ்சள்

  பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

  மிதுனம்:

  அலுவலகம் செல்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்று பிறருக்குக் கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் நீங்கள் விரும்பிய உங்களுக்கு சாதகமாக மாற்றங்கள் ஏற்படலாம். பெரிய நிகழ்ச்சிகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

  ராசியான எண்: 0 ராசியான நிறம்: வான் நீலம்

  பரிகாரம்: குரு அல்லது மூத்தவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

  கடகம்:

  இன்று நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில், உங்களுக்கு நிறைவான நாளாக அமையும். வியாபாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியான பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.

  ராசியான எண்: 5 ராசியான நிறம் ஆரஞ்சு

  பரிகாரம்: விநாயகருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

  சிம்மம்:

  எந்தவிதமான அரசியலிலும் ஈடுபடாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மனதில் புதிய முயற்சி மேற்கொள்வதற்கான ஆர்வமும் விருப்பமும் இருக்கும். யார் மீதாவது அதிக நம்பிக்கை வைத்தால் பணம் இழக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

  ராசியான எண்: 9 ராசியான நிறம்: தங்கம்

  பரிகாரம்: சிவபுராணம் பாராயணம் செய்யவும்.

  கன்னி:

  தாராளமாக நடப்பது மக்களை ஈர்க்கும். விரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தவறாக முதலீடு செய்யாதீர்கள், கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.

  ராசியான எண்: 7, ராசியான நிறம்: கருப்பு

  பரிகாரம்: எந்த வகையான வெள்ளைப் பொருளையும் தானம் செய்யலாம்.

  துலாம்:

  அலுவலகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க வேறு சில நல்ல வாய்ப்புகளையும் நீங்களே முயற்சி செய்து பெறலாம். வணிகர்களுக்கு இன்று மிகவும் ராசியான நாளாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. குடும்பத்தில் நீங்கள் நேர்மறையான நடத்தை, அனைவரையும் ஈர்க்கும்.

  ராசியான எண்: 6 ராசியான நிறம்: ஊதா

  பரிகாரம்: விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபடவும்.

  விருச்சிகம்:

  இன்று நீங்கள் வெற்றி பெறும் நாள். புதிய நம்பிக்கையுடன் தொடங்கும் நாளாக இருக்கும். நிலம், பூமி சார்ந்த வேலையில், வணிகத்தில் இருப்பவர்கள் அவர்களின் வேலையை விரிவாக்கலாம். வியாபாரத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், நீங்கள் உங்கள் துறையில் மூத்தவர்களைக் ஆலோசிக்க வேண்டும் இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம்.

  ராசியான எண்: 3 ராசியான நிறம்: சிவப்பு

  பரிகாரம்: சிவபுராணம் பாராயணம் செய்யவும்.

  தனுசு:

  உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கவும். புதிய வேலைகளை மன உறுதியுடன் தொடங்குவீர்கள். நிதி சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்தினால் மனம் அமைதியாக இருக்கும், வெற்றியும் கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.

  ராசியான எண்: 5 ராசியான நிறம்: வெள்ளை

  பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்கவும்

  மகரம்:

  இன்று பொறுமை அவசியம், சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஆன்லைன் வணிகம் செய்பவராக இருந்தால், வணிகத்தை வளர்க்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். எர்கனவே தடைப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்கு திட்டம் இருந்தால், இப்போது அதை செய்யலாம். அதனால் நல்ல பலன்களும் லாபமும் கிடைக்கும்.

  ராசியான எண்: 8 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு

  பரிகாரம்: வெள்ளை நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

  கும்பம்:

  பணம் தொடர்பான ஒப்பந்தங்களை புத்திசாலித்தனமாக மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடல் நலத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.

  ராசியான எண்: 2 ராசியான நிறம்: குங்குமப்பூ

  பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

  மீனம்:

  பணம் சம்பாதிக்க கூடுதலான முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த தடைகள் விலகும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் செய்தவர்களுக்கு துணையின் ஆதரவு கிடைக்கும்.

  ராசியான எண் : 1, ராசியான நிறம் - இளஞ்சிவப்பு

  பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  First published:

  Tags: Astrology, Money, Rasi Palan