மேஷம்:
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால், அலுவலகத்தில் உங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். எந்த விதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், இருக்கவும் இல்லையெனில் பணம் இழக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ராசியான எண்: 3 ராசியான நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் வழங்கி வழிபடவும்
ரிஷபம்:
எந்தவொரு முக்கியமான வேலையையும் செய்வதற்கு முன், உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். யாரையும் விரைவாக நம்பாதீர்கள். இல்லை என்றால், நீங்கள் தான் நஷ்டப்படுவீர்கள். பொருளாதார ரீதியாக, எல்லா பரிவர்த்தனைகளிலும் தெளிவாக இருப்பது எதிர்காலத்திற்கு உதவும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
ராசியான எண்: 1, ராசியான நிறம்: பச்சை
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தை வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.
மிதுனம்:
பெரிய முயற்சிகள் எடுப்பது, தொழில் மற்றும் வியாபாரத்தை பலப்படுத்தும். அன்புக்குரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு வீட்டில் குடும்பத்தாரின் ஆதரவு எப்போதும் கிடைக்கும். நிலம் மற்றும் பில்டிங் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் ஈட்டும் வழிகள் அதிகரிக்கும்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: சிவப்பு
பரிகாரம்: சிறுமிகளுக்கு பாயசம் கொடுக்கவும்.
கடகம்:
பரஸ்பர உறவுகளின் பிணைப்பும் அன்பும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் தலைமைத்துவ பண்பும், திறனும் அதிகரிக்கும். இது பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். அன்றாட வாழ்வில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடியுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
ராசியான எண்: 0 ராசியான நிறம்: ஆரஞ்சு
பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.
சிம்மம்:
புத்திசாலித்தனமாகவும், சமயோசிதமாகவும் முடிவெடுத்தால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் எப்போதுமே ஆற்றல் நிறைந்தவராக, உற்சாகமான நபராக இருப்பீர்கள்.
ராசியான எண்: 8 ராசியான நிறம்: தங்கம்
பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு நீர் வழிபாடு செய்யவும்.
கன்னி:
பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற அதிகப்படியான ஆசை உங்களை கடனாளியாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செய்யுங்கள். குடும்ப பிரச்சனைகளில் கண்ணியம் நீடிக்கும்.
ராசியான எண்: 2 ராசியான நிறம்: ஊதா
பரிகாரம்: மகாலட்சுமிக்கு தாமரைப்பூ வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.
துலாம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைவருடனும் இணக்கம் அதிகரித்து, அது பெரிய அளவில் நன்மை தரும். தகவல் தொடர்பு சிறப்பாக காணப்படுகிறது. இதன் மூலமாகவும், பணம் ஈட்டும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சகோதர சகோதரிகளுடன் அன்பும் நெருக்கமும் அதிகரித்து, உறவு மேம்படும்.
ராசியான எண்: 6 ராசியான நிறம்: வெள்ளை
பரிகாரம்: கறுப்பு நாய்க்கு எண்ணெயில் பொறித்த ஜாங்கிரியை கொடுக்கவும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு நீடிக்கும். எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கையில் நிம்மதியும், செழிப்பும் காணப்படும். ரியல் எஸ்டேட் சார்ந்த வேலைகளில் செல்வம் சேரும்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: கருப்பு
பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு உதவி செய்யுங்கள்.
தனுசு:
ஒரு விஷயத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை முறை மேம்படும், ஆனால் அதற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். அன்பானவர்களுடன் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
ராசியான எண்: 8 ராசியான நிறம்: நீலம்
பரிகாரம்: சர்க்கரை மற்றும் அரிசி மாவு கலந்து எறும்புகளுக்கு வழங்கவும்
மகரம்:
யாரேனும் உங்களை தவறாக தூண்டி விடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள் இல்லையென்றால் இழப்புகள் ஏற்படலாம். உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றவும். உறவினர்களிடம் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். பாரம்பரியமான வேலைகளில் ஈடுபடுங்கள். அன்புக்குரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு செயல்படுவீர்கள்.
ராசியான எண்: 6 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு நல்ல நாள், மரியாதைக்குரிய நபரின் வழிகாட்டுதலால் நீங்கள் செல்லும் பாதை எளிதாகும். லாபம் கிடைக்கும் புதிய வழிகள் காணப்படும். சிறிய சோதனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, அதிலிருந்து விலகி இருங்கள்; இல்லையெனில் நீங்கள் ஏதேனும் குற்றச்சாட்டில் மாட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
ராசியான எண்: 4 ராசியான நிறம்: பச்சை
பரிகாரம்: பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள்.
மீனம்:
வீட்டில் அன்பும் புரிதலும் மேம்படும். நீங்கள் பணிபுரியும் தற்போதைய ப்ராஜக்ட் மற்றும் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பொறுப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.
ராசியான எண்: 2 ராசியான நிறம்: நீலம்
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Money, Rasi Palan