மேஷம்:
இன்று உங்கள் மனதில் புதிய திட்டங்கள் தோன்றும், இது பணம் ஈட்டுவதற்கு சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களை விட மூத்தவரின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள். வீட்டில் பெரியவர்களை மதிக்க வேண்டும். குடும்பப் பிரச்சனைகளை பேசி சமரசம் செய்ய வேண்டியிருக்கலாம்.
ராசியான எண்: 7, ராசியான நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்லை அர்ச்சனை செய்து 108 முறை விநாயகர் மந்திரத்தை உச்சரிக்கவும்.
ரிஷபம்:
இன்று எந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்தாலும் அதன் பலனை உடனடியாகப் பெறலாம். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள். பணம் என்பது உங்களின் இழப்பீட்டின் மதிப்பைக் குறிக்கும். முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் அமையும்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் வைத்து வழிபடவும்.
மிதுனம்:
இன்று நீங்கள் மனம் கலங்கி இருக்கும்படியான சூழல் ஏற்படலாம். மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஒரு சிறிய பயணத்தையும் மேற்கொள்ளலாம். இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு கிடைக்கும். முழு நேரத்தையும் குடும்பத்தினருடன் செலவிடுங்கள் .
ராசியான எண்: 3 ராசியான நிறம்: வெளிர் மஞ்சள்
பரிகாரம்: கடுகு எண்ணெய் தடவி கருப்பு நாய்க்கு சப்பாத்தி கொடுக்கவும்.
கடகம்:
அறிமுகமில்லாதவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்நியரின் ஆலோசனையைக் கேட்டு எந்த முதலீடும் செய்யாதீர்கள், பெரிய நஷ்டம் ஏற்படும். உங்களை சுற்றியுள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீட்டில் சுப காரியங்கள் நடத்துவது பற்றி விவாதிப்பீர்கள்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.
சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அலுவலகம் சார்ந்த அனைத்து சச்சரவுகளுக்கும் இன்று தீர்வு கிடைக்கும். புதிய திட்டத்தில் நீங்கள் வேலைகளைத் தொடங்கலாம். சொத்து விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள்.
ராசியான எண்: 0 ராசியான நிறம்: கருப்பு
பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.
கன்னி:
இன்று பொருளாதார ரீதியாக மிகவும் நல்ல நாளாகும். இன்று உங்களுக்கு நாள் முழுவதும் லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்படும்.
ராசியான எண்: 5 ராசியான நிறம்: வெளிர் நீலம்
பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை 7 முறை பாராயணம் செய்யவும்.
துலாம்:
இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலர் தங்களுக்காக கொஞ்சம் பணம் சேமிக்கவோ, ஏற்பாடு செய்யவோ வேண்டியிருக்கும். கவலைப்படும்படி குடும்ப சூழல் இருக்கும்.
ராசியான எண்: 2 ராசியான நிறம்: சிவப்பு
பரிகாரம்: கூண்டுப் பறவைகளை விடுவிக்கவும்.
விருச்சிகம்:
இன்று பார்ட்னர்ஷிப் தொழில் நல்ல லாபம் தரும். அன்றாட வீட்டு வேலைகளை சமாளிக்க இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் குழந்தை சம்மந்தப்பட்ட ஒரு பெரிய முடிவை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: டர்க்கைஸ்-நீலம்
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு லட்டு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.
தனுசு:
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். வியாபார ரீதியாக இன்று மிகவும் இனிமையான நாளாக இருக்கும். எதிலும் அவசரப்பட வேண்டாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.
ராசியான எண்: 4 ராசியான நிறம்: ஊதா
மகரம்:
இந்த நாள் மிகவும் அனுகூலமானது, ரிஸ்க் எடுத்தாலும் லாபம் தரும். பொறுமையாக இருப்பது மற்றும் மென்மையாக நடந்து கொள்வது மூலம் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். துன்பத்தில் இருப்பவருக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும்.
ராசியான எண்:7 ராசியான நிறம்:பச்சை
பரிகாரம்: அம்மாவுக்கு இனிப்பு வழங்குங்கள்.
கும்பம்:
முக்கிய முடிவுகளை எடுக்காமல் தாமதிக்க வேண்டாம். உங்கள் நலம் விரும்பிகளின் அறிவுரைகளை மதிக்கவும். பொருளாதார ரீதியாக எல்லா விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள்.
ராசியான எண்: 7, ராசியான நிறம்: சாம்பல்
பரிகாரம்: அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும்
மீனம்:
அதிர்ஷ்டம் நன்றாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வணிகத்தில் லாபமும் செல்வாக்கும் அதிகரிக்கும். அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தலைமைப்பண்பும் நிர்வாகத்திறனும் வளர்த்துக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல பார்ட்னர்களாக இருப்பார்கள். நல்ல முயற்சி பலனளிக்கும்.
ராசியான எண்: 5, ராசியான நிறம்: வெளிர் சிவப்பு
பரிகாரம்: காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Money, Rasi Palan