Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 23, 2022) தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 23, 2022) தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 23) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகச் செலவாகலாம், இது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் இப்போதே செலவைக் குறைக்க திட்டமிடுகள். பழி வாங்கு உணர்வை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சூரியனுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்.

ரிஷபம்:

கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கக்கூடும், இதனால் வீட்டில் பதற்றம் நிறைந்திருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தடைபட்டதை நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம், காலப்போக்கில் மீண்டும் வேலையை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: பொன்
பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

மிதுனம்:

உங்கள் அதிர்ஷ்டத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். சிலர் உங்களுடன் தகராறில் ஈடுபட வாய்ப்புள்ளது. கையில் காசு இருக்கிறது என்பதற்காக அதிகம் செலவிட வேண்டும், இதற்காக எதிர்காலத்தில் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
பரிகாரம்: மஞ்சள் உண்ணக்கூடிய பொருட்களை தானம் செய்யவும்.

கடகம்:

உடல் பிரச்சனையால் வேலை பாதிக்கப்படலாம். மூத்தவர்களின் அட்வைஸைக் கேட்க பிடிக்காது, ஆனால் காது கொடுத்து கேட்பது நன்மை தரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திடீர் பண வரவு உண்டு.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை புளூ
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.

சிம்மம்:

அலுவலகத்தில் கடின உழைப்பு செலுத்தியதற்கான பலன் விரைவில் கிடைக்கக்கூடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்; நீங்கள் எந்த நாள்பட்ட நோயிலிருந்தும் விடுபடலாம். உங்களை பற்றி பரவி வந்த சர்ச்சை இப்போது பெரிதாக வாய்புள்ளது.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பரிகாரம்: அனுமானுக்கு சாலிசா பாராயணம் செய்யவும்.

கன்னி:

வேலையில் வெற்றி பெறுவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கான மதிப்பு கூடும், வேலைக்கு அமர்ந்த போட்டா போட்டி கூட நடக்கலாம். பழைய நண்பர்களை சந்திக்ககூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: பாதாம்
பரிகாரம்: சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்.

துலாம்:

தொழில் அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்குவதையும், ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வதையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: டார்க் புளூ
பரிகாரம்: வீட்டை விட்டு வெளியேறும் முன்பு பெரியவர்களின் ஆசி பெறவும்.

விருச்சிகம்:

அன்புக்குரியவர்களின் வார்த்தைகள் மனதிற்கு தெம்பு தரும். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். தடைப்பட்ட வேலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அனைத்தும் காலப்போக்கில் சரியாகும். பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஓம் நமச்சிவாய என்று 108 முறை ஜபிக்கவும்.

தனுசு:

அடுத்தடுத்து பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை மோசமாகலாம். திடீர் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை யோசித்து செலவிட வேண்டும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

மகரம்:

வேறு வாய்ப்புகள் கிடைத்தால், மாற்றம் பற்றிய கவலை உருவாகலாம். சகோதரர்களுக்குள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி டென்ஷன் அதிகரிக்கலாம். நீண்ட காலமாக வராமல் இருந்த பணத்தை எளிதாக திரும்ப பெற முடியும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்.

கும்பம்:

இன்று தொழில் ரீதியாக ஒரு சிறப்பு நாளாக இருக்கும், பண ஆதாயங்களும் உள்ளன. இன்று உங்களின் சிறப்பு ஒப்பந்தம் முடிவடையும். நல்ல நிலையில் இருங்கள். அன்பானவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: பைரவர் கோவிலில் இனிப்புகள் வழங்கவும்.

மீனம்:

நீண்ட நாட்களாக இடம் மாறத் திட்டமிடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பலம் அதிகரிக்கும். நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
பரிகாரம்: துர்க்கை கோவிலில் துர்கா சாலிசா பாராயணம் செய்யவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி