முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 22, 2022) பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நாள் ஆகும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 22, 2022) பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நாள் ஆகும்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 22) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நிலைமை இன்று உங்களுக்கு சீராக இருக்கும் என்றாலும் பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கலாம். பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

பரிகாரம்: ஏழ்மையில் உள்ள ஒருவருக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்

ரிஷபம்:

இன்று உங்களது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எனவே புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள். பொதுவாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

பரிகாரம்: பறவைக்கு தானியம் கொடுங்கள்

மிதுனம்:

இன்று உங்களது அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்த தடையும் இருக்காது. புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் உங்களை வந்து சேரலாம். அதே போல பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கும் திறனை இன்று பெற்றிருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

பரிகாரம்: : கருப்பு நிற நாய்க்கு ஏதாவது இனிப்பு கொடுங்கள்

கடகம்:

இன்று எந்தவொரு சொத்து ஒப்பந்தத்தையும் முடிப்பதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படலாம். இன்று வாக்குவாதம் அல்லது மோதலை தவிர்க்கவும், முதலீட்டை தள்ளி போடவும் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: கிரே

பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்

சிம்மம்:

இன்று வியாபாரத்தில் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்த வியாபாரம் செய்பவர்களின் வியாபாரம் இயல்பாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன், கண்டிப்பாக அது சம்பந்தப்பட்டவர்களின் கருத்தை கேளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: லைட் கிரீன்

பரிகாரம்: எறும்புகளுக்கு உணவு வைக்கவும்

கன்னி:

வியாபாரத்தில் சில புதிய திட்டங்களுக்கான வேலைகளை இன்று நீங்கள் தொடங்கலாம். உங்கள் துணையின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெயில் விளக்கேற்றவும்

துலாம்:

தொழில் துறையில் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நீங்கள் இன்று பெயரும் புகழும் பெறுவீர்கள் இதனால் உங்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கையின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

பரிகாரம்: சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் அதற்கு உங்கள் பேச்சைக் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் உங்கள் வாயிலிருந்து வரும் ஒரு தவறான வார்த்தை உங்களை சிக்கலில் மாட்டிவிடும். இன்று வீட்டிற்கு வரும் உறவினருடன் சுமுகமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நிறம்: கோல்டன் கலர்

பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு வெள்ளைப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்

தனுசு:

திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வழக்கமான பணிகள் மூலம் நிதி நிலைமை சீராக இருக்கும். பல நாட்களாக நீடித்த நிதி சிக்கல்கள் இன்று தீரும். உங்கள் பெரிய பிரச்சனைகளும் இன்று முடிவுக்கு வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

பரிகாரம்: ராமர் கோவிலில் கொடியை காணிக்கையாக செலுத்துங்கள்

மகரம்:

தொழில் சம்பந்தமான இன்றைய பயணங்கள் எதிர்பார்த்த பலனை தராது. புதிய பணியிடத்தில் சேருவதற்கு அல்லது புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைத் தொடங்குவதற்கு நாள் இன்று சாதகமாக இல்லை. உங்களது பிசினஸ் பார்ட்னருடன் பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்

கும்பம்:

தேவையற்ற காரியங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள் ஏனென்றால் பண நஷ்டம் ஏற்படுவதோடு, வரும் புதிய வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பொருளாதார நிலை சற்று மேம்படும்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

பரிகாரம்: சிவபெருமானுக்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்

மீனம்:

கடனைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்று அதிகம் இருக்கும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் இன்று கடன் வாங்க வேண்டியிருக்கும். நிதி சிக்கலால் வேலை பாதிக்கப்படலாம், மேலும் மன உளைச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

top videos

    பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு தேங்காய் கொடுக்கவும்

    First published:

    Tags: Astrology, Money, Rasi Palan