Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 20, 2022) வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 20, 2022) வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 20) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:


வீட்டில் அன்பு மற்றும் புரிந்துணர்வு மேலோங்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால் நீங்கள் செய்யும் பணிகள் மற்றும் ஆராய்ச்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொறுப்புகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
பரிகாரம் - பசுமாட்டுக்கு தீவனம் வைக்கவும்.


ரிஷபம்:


இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். பரஸ்பர நம்பிக்கையின் காரணமாக குடும்ப உறவுகள் பலப்படும். பண வரவு காணப்படும். வெற்றி பெற வேண்டி குறுக்கு வழிகளை பின்பற்ற வேண்டாம்.


அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
பரிகாரம் - லட்சுமியை வழிபடவும்.


மிதுனம்:


இன்று மிக அற்புதமான நாளாகும். குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக உங்களது மதிப்பு மற்றும் மரியாதை உயரும். வளர்ச்சி வேண்டுமெனில் புதிய வாய்ப்புகளை தேட வேண்டி இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.


அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.


கடகம்:


அதிகாரிகளிடமிருந்து சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். பிறரிடம் கொடுத்த பணம் திரும்ப வரும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். பெரும் பிரச்சினைகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.


அதிர்ஷ்ட எண் - 0
அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
பரிகாரம் - குரு அல்லது மூத்தவர்களின் ஆலோசனையை பின்பற்றவும்.


சிம்மம்:


இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான நேரத்தை செலவழிப்பீர்கள். நிதி சார்ந்த பிரச்சினைகளில் சாதகமான தீர்வுகள் கிடைக்கும். பண வரவு உண்டு.


அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
பரிகாரம் - பிள்ளையாருக்கு லட்டு படைக்கவும்.


கன்னி:


எந்தவித அரசியல் விவகாரங்களிலும் தலையிடாமல் பணிகள் மீது கவனம் செலுத்தவும். புதியதொரு முயற்சியை மேற்கொள்வதற்கான ஆர்வம் சிந்தனையில் உதிக்கும். எவர் மீதும் அதிகப்படியான நம்பிக்கைகள் கொண்டால் நிதி சார்ந்த இழப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - கோல்டன்
பரிகாரம் - சில மந்திரம் உச்சரிக்கவும்.


துலாம்:


உங்களின் துடிப்பான மனப்பாங்கு பலரது கவனத்தை ஈர்க்கும். விரைவாக லாபம் பெற நினைத்து தவறான முதலீடுகளை செய்ய வேண்டாம். கவனம் தேவை. படிப்பில் நல்ல திறமையை வெளிக்காட்டுவீர்கள். திருமணமானவர்களுக்கு குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு
பரிகாரம் - வெள்ளை நிற பொருளை தானம் செய்யவும்.


விருச்சிகம்:


பணியிடத்தில் உங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான சாதகமான சூழல் உங்களுக்கு இருக்கிறது. குடும்பத்தில் நீங்கள் காட்டும் நேர்மறையான அணுகுமுறை எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும்.


அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வயலட்
பரிகாரம் - பிள்ளையாருக்கு இனிப்பு படைக்கவும்.


தனுசு:


இன்றைய நாளில் வெற்றி கிடைக்கும். ஆகவே நம்பிக்கையுடன் பொழுதை தொடங்கவும். வணிகத்தில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு முன்பாக மூத்தவர்களை கலந்து ஆலோசனை செய்யவும் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.


அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
பரிகாரம் - சில மந்திரங்களை உச்சரிக்கவும்.


மகரம்:


அன்றாட பணிகளில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். புதிய பணியை தொடங்குவதற்கு உங்கள் மனதை தயார் செய்து கொள்ளுங்கள். நிதி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலமாக மனதில் அமைதி நிலவும். லாபம் கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.


அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
பரிகாரம் - சரஸ்வதியை வழிபடவும்.


கும்பம்:


சின்னஞ்சிறிய விஷயங்களுக்கு கோபம் கொள்ளாமல் இன்று நீங்கள் முழுமையாக அமைதி காக்க வேண்டும். ஆன்லைன் வணிகம் செய்பவர் என்றால் லாபம் அடைவதற்கு புதிய உத்திகளை செயல்படுத்த வேண்டும். தடைபட்ட பணியை மீண்டும் தொடங்கி பலன் அடைவதற்கான நேரம் இது.


அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
பரிகாரம் - வெள்ளை நிற பொருளை தானம் செய்யவும்.


மீனம்:


பணம் சார்ந்த விவகாரங்களை சாதுர்யமாக கையாளவும். உடல் ஆரோக்கிய விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாதங்களை தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.


அதிர்ஷ்ட எண் -2
அதிர்ஷ்ட நிறம் - காவி
பரிகாரம் - ஏழைகளுக்கு பழங்களை தானமாக வழங்கவும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி