முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 19, 2022) தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 19, 2022) தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 19) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 1-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று அதிர்ஷ்டமான நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். லாபம் அதிகரிக்கும். சிறந்த தலைமை மற்றும் மேலாண்மை திறன் கொண்டவர்களுக்கு சக ஊழியர்கள் நட்புறவுடன் செயல்படுவார்கள். பெரிய இலக்குகளை அடைய ரிஸ்க் எடுக்க வேண்டி வரலாம்.

  அதிர்ஷ்ட எண்: 7

  அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

  பரிகாரம்: தர்ப்பைப் புல் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும்

  ரிஷபம்:

  பணியிடத்தில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்வீர்கள். பண விஷயத்தில் கவனமாக செயல்படாவிட்டால் நிதி இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

  அதிர்ஷ்ட எண்: 3

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் உடைக்கவும்.

  மிதுனம்:

  எந்தவொரு முக்கியமான வேலையையும் செய்வதற்கு முன் உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். சீக்கிரம் யாரையும் நம்பாதீர்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். பொருளாதார பரிவர்த்தனைகளில் தெளிவு இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது. ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

  அதிர்ஷ்ட எண்: 1

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  பரிகாரம்: துர்கை அம்மனுக்கு சிவப்பு நிற புடவை வழங்கி பூஜியுங்கள்.

  கடகம்:

  தொழில் மற்றும் வியாபாரத்தை வலுப்படுத்த அதிகப்படியாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் அல்லது மேலாதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தினர் உங்களுக்கு முழு சப்போர்ட் செய்வார்கள். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பண வரவு உண்டு.

  அதிர்ஷ்ட எண்: 9

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

  பரிகாரம்: சிறுமிகளுக்கு ஏதாவது ஒரு கீர் வகையை வழங்கவும்

  சிம்மம்:

  குடும்பத்தில் உறவுகளுக்குள் இருந்த விரிசல் சரி செய்யப்பட்டு, உறவு வலுப்படும். பணியிடத்தில்  தலைமைப்பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது, இதனால் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் வரக்கூடும். அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் சம்பாதிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

  அதிர்ஷ்ட எண்: 0

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.

  கன்னி:

  புத்திசாலித்தனமான முடிவுகள் நிச்சயம் வெற்றியைத் தரும். செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். இன்று வழக்கத்தை விட உற்சாகமாக காணப்படுவீர்கள். இலக்குகளை பெரியதாக நிர்ணயிக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட எண்: 8

  அதிர்ஷ்ட நிறம்: பொன்

  பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரிய பகவானை தண்ணீர் வைத்து வழிபடவும்.

  துலாம்:

  அதிகப்படியான பொருட்களை வாங்கிக் குவிப்பது உங்களை கடனாளியாக்க வாய்ப்புள்ளது. எந்த காரியத்தையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள். குடும்ப விஷயங்களில் கண்ணியம் காக்கப்படும்.

  அதிர்ஷ்ட எண்: 2

  அதிர்ஷ்ட நிறம்: ஊதா

  பரிகாரம்: தாமரை மலரால் லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

  விருச்சிகம்:

  தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைவருடனும் இணக்கம் அதிகரிப்பது நன்மை தரும். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும், இது பணம் பெற புதிய வாய்ப்புகளை கொடுக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சகோதர சகோதரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

  அதிர்ஷ்ட எண்: 6

  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

  பரிகாரம்: கறுப்பு நாய்க்கு எண்ணெயில் செய்யப்பட்ட ஜிலேபியை வழங்கவும்.

  தனுசு:

  இன்று உங்கள் நம்பிக்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பம், வேலை என அனைத்து விஷயங்களிலும் இன்று நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் சேரும். அனைவரையும் சமமாக மதித்து பழக வேண்டும்.

  அதிர்ஷ்ட எண்: 9

  அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

  பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபருக்கு சேவை செய்யுங்கள்.

  மகரம்:

  வழக்கமாக சிந்திப்பதை சற்றே மாத்தி யோசித்தால் புதிய வழிகள் பிறக்கும். லைப் ஸ்டைலை மேம்படுத்த பணம் செலவழிக்க வேண்டிவரும். புதிய வேலை வாய்ப்புக்கள் அல்லது பணியிடத்திலேயே நல்ல ஆஃபர்கள் கிடைக்கக்கூடும். பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். அன்பானவர்களுடன் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

  அதிர்ஷ்ட எண்: 8

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  பரிகாரம்: சர்க்கரை மற்றும் மாவு கலவையை எறும்புகளுக்கு வைக்கவும்.

  கும்பம்:

  யாரோ சொல்வதைக் கேட்டு காரியங்களில் இறங்குவது நஷ்டத்தை ஏற்படுத்தலாம். கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய வேலைகளில் ஈடுபடலாம். உங்களிடம் உண்மையாக இருக்கும் நபர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.

  அதிர்ஷ்ட எண்: 6

  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

  பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

  மீனம்:

  நீங்கள் மதிக்கும் நபரின் அட்வைஸ் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும். தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. தேவையில்லாத விஷயத்தை செய்யாதீர்கள், அது உங்களை பிரச்சனையில் சிக்கவைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

  அதிர்ஷ்ட எண்: 4

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  பரிகாரம்: பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள்.

  First published:

  Tags: Astrology, Money, Rasi Palan