முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 18, 2022) பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 18, 2022) பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 18) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மேஷம்:

நீண்ட காலமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டு வரும் மக்களுக்கு அது நடந்தேறும். பண லாபம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

பரிகாரம் - துர்கை அம்மன் கோவிலில் துர்கை மந்திரம் உச்சரிக்கவும்.

ரிஷபம்:

இன்றைக்கு உங்கள் சிந்தனையில் தோன்றும் புதிய திட்டங்கள் பண வரவை தேடி தரும். பணியில் சீனியர்களின் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம்.

அதிர்ஷ்ட எண் - 7

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

பரிகாரம் - பிள்ளையாருக்கு அருகம்புல் படைத்து, 108 முறை நாமத்தை உச்சரிக்கவும்.

மிதுனம்:

இன்றைக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் வெற்றி கிடைக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் இழப்பு ஏற்படலாம். முதலீடு செய்யும் முன்பாக நிபுணர்களிடம் ஆலோசிக்கவும்.

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - காவி

பரிகாரம் - கிருஷ்ணருக்கு இனிப்பு படையல் செய்யவும்.

கடகம்:

இன்றைக்கு உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். மனம் புத்துணர்ச்சி அடைய சிறிய பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

பரிகாரம் - கருப்பு நாய்க்கு ரொட்டி உணவளிக்கவும்.

சிம்மம்:

அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். அவர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும். உங்களைச் சுற்றியுள்ள மக்களால் குழப்பம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

கன்னி:

பணி சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இன்று தீர்வு கிடைக்கும். புதிய திட்டப் பணிகளை தொடங்குவீர்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் குடும்பத்தினர் மூலமாக பிரச்சனை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் - 0

அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

பரிகாரம் - ஆலமரத்தடியில் நெய் விளக்கு ஏற்றவும்.

துலாம்:

பொருளாதார ரீதியாக நல்ல நேரம் கூடி வருகிறது. லாபம் அடைவதற்கான வாய்ப்புகள் நாள் முழுவதும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை நீடிக்கும்.

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

விருச்சிகம்:

இன்று மிக கவனமாக இருக்க வேண்டும். வணிகத்தில் பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கவலையான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

பரிகாரம் - கூண்டில் உள்ள பறவைகளை திறந்து விடவும்.

தனுசு:

பார்ட்னர்ஷிப் உடன் மேற்கொள்ளப்படும் வணிகங்களில் மிகுதியான லாபம் கிடைக்கும். தினசரி வீட்டுப் பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு காண முடியும். குழந்தை நலன் சார்ந்த பெரும் முடிவை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - ஃபிரோஸி

பரிகாரம் - பிள்ளையாருக்கு லட்டு படைக்கவும்.

மகரம்:

உடல்நலன் மீது அக்கறை கொள்ளவும். வானிலை மாற்றம் காரணமாக உடல்நலன் பாதிக்கப்படலாம். அவசரம் கூடாது. குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

பரிகாரம் - பசுவுக்கு தீவனம் வைக்கவும்.

கும்பம்:

ரிஸ்க் எடுப்பதன் மூலமாக லாபம் கிடைக்கும். அமைதியான அணுகுமுறையை கடைப்பிடித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். துன்பத்தில் உள்ள ஒருவருக்கு உதவும் வாய்ப்பு வரும்.

அதிர்ஷ்ட எண் - 7

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

பரிகாரம் - தாய்க்கு இனிப்பு வழங்கவும்.

மீனம்:

முக்கியமான முடிவுகளை நிலுவையில் வைத்திருக்க வேண்டாம். நல்லெண்ணம் கொண்டவர்களின் அறிவுரையை ஏற்கவும். உங்கள் பட்ஜெட் என்னவென்பதை தீர்மானித்து, அதற்கேற்ப செலவு செய்யவும்.

அதிர்ஷ்ட எண் - 7

அதிர்ஷ்ட நிறம் - கிரே

பரிகாரம் - பிள்ளையாருக்கு அருகம்புல் படைக்கவும்.

First published:

Tags: Astrology, Money, Rasi Palan