மேஷம்:
உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். கடன் பற்றிய கவலை ஏற்படும்; தினசரி செலவுகளுக்குக் கூட பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலை பாதிக்கப்படலாம். இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.
ராசியான எண்: 3 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.
ரிஷபம்:
அன்றாட தேவைகளை நிறைவேற்ற அதிக பணம் செலவாகும். உரிய நேரத்தில் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனையாகும். பழிவாங்கும் உணர்வு உங்களை பாதிக்கும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
ராசியான எண்: 1, ராசியான நிறம்: சிவப்பு
பரிகாரம்: சூரியனுக்கு நீர் வழங்கி வழிபடவும்.
மிதுனம்:
கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கலாம். இதனால் வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வேலைகளில் ஏற்பட்ட தடையை பற்றி கவலை அதிகரிக்கும். ஆனால் காலப்போக்கில், மாறிவிடும்.
ராசியான எண்: 7, ராசியான நிறம்: தங்கம்
பரிகாரம்: பசுக்களுக்கு தீவனம் கொடுங்கள்.
கடகம்:
அதிர்ஷ்டமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக செலவழிக்க வேண்டாம். சில காரணங்களால் தகராறுகள் அதிகரிக்கலாம். பணத்தை செலவழிக்கும் முன் யோசியுங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படலாம்.
ராசியான எண்: 9 ராசியான நிறம்: ஊதா
பரிகாரம்: மஞ்சள் நிறத்தில் சாப்பிடக் கூடிய பொருளை தானம் செய்யுங்கள்.
சிம்மம்:
உடல் பிரச்சனையால் வேலை பாதிக்கப்படலாம். பெரியவர்களின் வார்த்தைகள் கசக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திடீர் பண ஆதாயமும் உண்டாகும்.
ராசியான எண்: 7, ராசியான நிறம்: வான் நீலம்
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி:
பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், எதிர்காலத்தில் அதற்கான பலனைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்; நீங்கள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விடுபடலாம்.
ராசியான எண்: 5 ராசியான நிறம்: மஞ்சள்
பரிகாரம்: அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்.
துலாம்:
வேலையில் வெற்றி பெறுவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ராசியான எண்: 4 ராசியான நிறம்: பாதாமி
பரிகாரம்: சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.
விருச்சிகம்:
தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யாதீர்கள்.
ராசியான நிறம்: ஃபிரோசி, ராசியான எண்: 2
பரிகாரம்: பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்ற பின்பு வெளியே செல்லவும்.
தனுசு:
அன்பாக இருப்பவர்களின் வார்த்தைகள் உங்கள் மனதில் பதியும். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். முடங்கிய வேலைகளைப் பற்றி கவலை ஏற்படலாம். கொஞ்ச காலம் பொறுமையாக இருங்கள். பணம் இழக்க நேரிடும், எனவே கவனமாக இருங்கள்.
ராசியான எண்: 8 ராசியான நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஓம் நம சிவாய என்று 108 முறை ஜபிக்கவும்.
மகரம்:
பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கலாம். நிதி நிலைமை மோசமாகலாம். கவனமாக, தேவைகள் இருப்பவைக்கு மட்டும் செலவு செய்யுங்கள், இல்லையென்றால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
ராசியான எண்: 5 ராசியான நிறம்: பச்சை
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்.
கும்பம்:
அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏதேனும் முக்கிய விஷயம் மாறுவது பற்றிய கவலை இருக்கலாம். சகோதரர்களிடையே டென்ஷன் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் பணத்தை பெற முடியும்.
ராசியான எண்: 2 ராசியான நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்.
மீனம்:
இன்று தொழில் ரீதியாக மிகச்சிறந்த நாள், லாபங்களும் பெறுவீர்கள். இன்று ஒரு சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
ராசியான எண்: 6 ராசியான நிறம்: பச்சை
பரிகாரம்: பைரவர் கோயிலில் இனிப்புகள் வழங்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Money, Rasi Palan