முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 16, 2022) புதிய லாபங்களுக்கான வழி பிறக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 16, 2022) புதிய லாபங்களுக்கான வழி பிறக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 16) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Last Updated :

மேஷம்:

இன்று மிக சிறப்பான நாள். நீங்கள் மதிக்கத்தக்க நபரின் வழிகாட்டுதலுடன் இனிமையானதாக அமையும். புதிய லாபங்களுக்கான வழி பிறக்கும். சின்ன, சின்ன கோபங்களை தவிர்க்கவும். இல்லை என்றால் பிரச்சினை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

பரிகாரம் - பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறவும்.

ரிஷபம்:

வீட்டில் அன்பு மற்றும் புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் முன்னெடுக்கும் ஆராய்ச்சி மற்றும் திட்டத்தில் வெற்றி பெறுவீர்கள். வணிகத்தில் இருக்கக் கூடிய நபர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

பரிகாரம் - பசுவுக்கு பச்சை தீவனம் வைக்கவும்.

மிதுனம்:

நிலுவையில் உள்ள அவசர வேலையை இன்று எளிமையாக செய்து முடிப்பீர்கள். பரஸ்பர நம்பிக்கை காரணமாக குடும்ப பந்தங்கள் பலப்படும். துரிதமாக வெற்றி பெற எண்ணி, நியாயத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் - 8

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

பரிகாரம் - லட்சுமியை வழிபடவும்.

கடகம்:

குடும்ப உறுப்பினர் மூலமாக உங்கள் பெருமை உயரும். சரியான மரியாதை கிடைக்கும். புதிய வழிகளைக் கண்டறிந்து வளம் பெறுவதற்கான நேரம் இது. இன்றைக்கு உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தவும்.

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

பரிகாரம் - ஹனுமன் பாடல்களை பாடவும்.

சிம்மம்:

அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அங்கீகாரம் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். பெரும் பிரச்சினை ஒன்றில் பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் - 0

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

பரிகாரம் - குரு அல்லது மூத்தவர்களின் ஆசிர்வாதம் பெறவும்.

கன்னி:

இன்றைக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். வர்த்தகர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

பரிகாரம் - பிள்ளையாருக்கு லட்டு படைக்கவும்.

துலாம்:

எந்தவித அரசியலில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிதாக ஒன்றை முயற்சி செய்வதற்கான ஆர்வம் உங்கள் மனதில் உதிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - கோல்டன்

பரிகாரம் - சிவ மந்திரத்தை பாடவும்.

விருச்சிகம்:

ஜனரஞ்சகமான நடவடிக்கை பிற மக்களை ஈர்க்கும். துரிதமாக லாபம் பெற நினைத்து தவறான திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது. சற்று கவனமாக இருக்கவும். கல்வியில் உங்கள் செயல்பாடு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண் - 7

அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

பரிகாரம் - வெள்ளை நிறத்தில் ஏதேனும் ஒன்றை தானம் செய்யவும்.

தனுசு:

பணியிடத்தில் உங்கள் திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரலாம். அதேபோன்று தொழில் அதிபர்களுக்கும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட எண் - 6

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

பரிகாரம் - பிள்ளையாருக்கு இனிப்பு படைக்கவும்.

மகரம்:

இன்றைய நாள் வெற்றியை தரும். புதிய நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை தொடங்கவும். வணிகத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன்பாக மூத்தவர்களுடன் ஆலோசனை செய்யவும். இல்லை என்றால் நஷ்டம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

பரிகாரம் - சிவ மந்திரம் உச்சரிக்கவும்.

கும்பம்:

உங்கள் அன்றாட பணிகளில் சில மாற்றங்களை செய்யுங்கள். புதிய பணியை செய்வதற்கு உங்கள் மனதை தயார் செய்து கொள்ளுங்கள். நிதி சார்ந்த பணியில் கவனம் செலுத்துவதன் மூலமாக உங்கள் மனம் அமைதி அடையும். வெற்றியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

பரிகாரம் - சரஸ்வதியை வழிபடவும்.

மீனம்:

சின்ன, சின்ன விஷயங்களில் கோபத்தை தவிர்த்து அமைதி காக்கவும். ஆன்லைன் வணிகம் செய்கிறீர்கள் என்றால் லாபம் பெறுவதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்தவும். தடைபட்ட திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு இதுவே சரியான தருணம்.

அதிர்ஷ்ட எண் - 8

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

top videos

    பரிகாரம் - ஏதேனும் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யவும்.

    First published:

    Tags: Astrology, Money, Rasi Palan