Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 15, 2022) வியாபார புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 15, 2022) வியாபார புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 15) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
மேஷம்:

புதிய திட்டங்களை தொடங்க இன்று நல்ல நாள், இது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று சட்ட வழக்குகளில் சாதமான வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

ரிஷபம்:

இன்று குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கலாம். உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நேசிக்கும் நபரிடம் காதலை வெளிப்படுத்த நல்ல நாள். பணியாளர்களின் கடின உழைப்பு மேலதிகாரிகளை திருப்திப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் மீது பெரியவர்களின் அன்பு நிலைத்திருக்கும். குழந்தைகளும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்: பறவைக்கு தானியம் கொடுங்கள்.

கடகம்:

புதிய வேலைகள் மற்றும் வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும். திட்டமிட்டு தொடங்கினால் வேலை வெற்றிகரமாக நிறைவடைய வாய்ப்புள்ளது. அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: கருப்பு நாய்க்கு இனிப்பு ஏதாவது கொடுங்கள்.

சிம்மம்:

திட்டங்கள் மற்றும் பணிகளில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. எந்தவிதமான வாக்குவாதம் அல்லது மோதலைத் தவிர்க்கவும். முதலீட்டை தள்ளிப் போடுவது நல்லது. எந்தவொரு சொத்து ஒப்பந்தத்தையும் முடிப்பதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

கன்னி:

இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன் கண்டிப்பாக அந்த துறை சார்ந்தவர்களின் கருத்தை கேட்க வேண்டும். இன்று வியாபாரத்தில் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்த வியாபாரம் செய்பவர்கள் பணி சீராக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம் - சர்க்கரை மற்றும் மாவு கலவையை எறும்புகளுக்கு வழங்கவும்

துலாம்:

வியாபாரத்தில் சில புதிய திட்டங்களுக்கான வேலைகளை தொடங்கலாம். வாழ்க்கைத் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியை தரும். காதல் வாழ்க்கைக்கு நல்ல நாள். இன்று நினைத்த காரியம் நிறைவேறும். முக்கிய நபர்களை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

விருச்சிகம்:

கல்வியில் வெற்றி பெற வாய்ப்புண்டு, பெயரும் புகழும் அதிகரிக்க வாய்ப்புண்டு. நல்ல ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை அளவு கணிசமாக அதிகரிக்கும். தொழில் துறையில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். வயிலிருந்து தவறாக வரும் வார்த்தைகளால் பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளதால் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்று வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து, உபசரியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளைப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

மகரம்:

நிதி விவகாரங்கள் தீரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீங்கள் சமரசம் மற்றும் பணிவுடன் சிக்கலான விஷயங்களைத் தீர்க்க முடியும். வழக்கமான வேலை மூலம் பணம் சம்பாதிக்கலாம். கடன் வாங்க மனதை உறுதி செய்து கொள்ளலாம். உங்கள் பெரிய பிரச்சனைகளும் முடிவுக்கு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்: ராமர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்.

கும்பம்:

பிசினஸ் பார்டனர் உடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தமான பயணங்கள் எதிர்பார்த்த பலனைத் தராது. புதிய பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைத் தொடங்குவதற்கு இன்று நாள் நன்றாக இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1
பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மீனம் :

உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் தொடர்புகளை அதிகரிக்கலாம். வீணான காரியங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள், இதை செய்தால் பண நஷ்டம் ஏற்படுவதோடு, வரும் வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பொருளாதார நிலையை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் சமர்பிக்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி