Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 14, 2022) வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 14, 2022) வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 14) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேஷம்:

பணம் சம்பாதிக்க முயற்சி தேவைப்படும். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் உங்கள் துணை ஆதரவாக இருப்பார்.

ராசியான எண்: 1
ராசியான நிறம்: இளஞ்சிவப்பு

பரிகாரம்: ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்:

குடும்பம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். உரையாடலில் ஈகோவைத் தவிர்க்கவும். ஆன்மீக ரீதியான பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பயண செல்வதற்கான யோகம் அமையும். அதன் மூலம் பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

ராசியான எண் : 1
ராசியான நிறம்: காவி

பரிகாரம் - சிவபெருமானுக்கு நீர் வழங்கி வழிபாடு செய்யுங்கள்

மிதுனம்:

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பணம் சம்பாதிக்க, கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தரவேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் போராட்டங்கள் காணப்படும்.

ராசியான எண்: 5
ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி செய்யுங்கள்.

கடகம்:

திடீர் செலவுகள் அதிகரிக்கும், இதனால் நிதி நிலை பாதிக்கலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.

ராசியான எண்: 9
ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

சிம்மம்:

நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். முழு ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள். சொத்து சார்ந்து புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்தால் தான் லாபம் கிடைக்கும். இல்லையெனில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம்.

ராசியான எண்: 3
ராசியான நிறம்: பாதாமி

பரிகாரம் - பசுவிற்கு சப்பாத்தி கொடுக்கவும்.

கன்னி:

சுபகாரியங்களுக்கான செலவுகளை செய்வதற்காக கடன் வாங்க நேரிடும். புதிதாக பலரை சந்திப்பீர்கள். நீண்ட காலம் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ராசியான எண்: 4
ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

துலாம்:

பண வரவு மற்றும் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் மரியாதை மேலும் அதிகரிக்கும். துறையில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் கோபமாக நடந்து கொண்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரும்.

ராசியான எண்: 10
ராசியான நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம்: சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. மாதம் மற்றும் ஆன்மீக ரீதியான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலை பற்றி கவலை வேண்டாம்.

ராசியான எண் : 3
ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

தனுசு:

அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். இடமாற்றம் செய்ய விரும்பினால், அது சாதகமாக அமையும். உறவினர்களுடன் பிணைப்பு மேம்படும்.

ராசியான எண்: 7
ராசியான நிறம்: குங்குமப்பூ

பரிகாரம்: சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

மகரம்:

கல்வி தொடர்பான வேலைகள் அனைத்தும் சாதகமாக முடியும். யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பேச்சில் கண்ணியமாக இருக்கவும். அவசரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பணம் சம்பாதிக்க நீங்கள் வழக்கத்தை விட கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ராசியான எண்: 1
ராசியான நிறம்: செந்தூரம்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ஆரத்தி எடுங்கள்.

கும்பம்:

முழு ஆர்வத்துடன் வேலை செய்தால், பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், தாமதிக்க வேண்டாம். இல்லையென்றால், பெரிய லாபம் பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்.

ராசியான எண்: 10
ராசியான நிறம்: மெரூன்

பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

மீனம்:

இன்று தொழில் ரீதியாக மிகச் சிறப்பான நாளாக இருக்கும். புதிய, தனித்துவமான ஒப்பந்தம் இன்று முடிவடையும். இது உங்கள் வருமானம் அதிகரிக்கவும், லாபம் பெறவும் உதவும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் தேவை.

ராசியான எண்: 5
ராசியான நிறம்: கிரீம்

பரிகாரம்: பசுவிற்கு புல் அல்லது கீரையை வழங்கவும்
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி