முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 13, 2022) எதிர்பாராத லாபம் வந்து சேரும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 13, 2022) எதிர்பாராத லாபம் வந்து சேரும்.!

செல்வ வாக்கு

செல்வ வாக்கு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 13) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • Last Updated :

  மேஷம்:

  முக்கிய முடிவுகளை எடுப்பதை ஒத்திவைக்க வேண்டாம். உங்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருப்பவர்களின் நல்ல அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பாராத லாபம் வந்து சேரும்.

  ராசியான எண்: 4

  ராசியான நிறம்: கிரே

  பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் படையல் போடவும்.

  ரிஷபம்:

  அதிர்ஷ்டம் பலமாக இருக்கிறது. பணி மற்றும் வணிகம் சார்ந்து வளர்ச்சி கிடைக்கும். உங்கள் லாபம் அதிகரிக்கும். தலைமைத்துவ பண்பு மற்றும் மேலாண்மை பண்புகள் வளர்ச்சி அடைய இருக்கிறது.

  ராசியான எண்: 5

  ராசியான நிறம்: இளம் சிவப்பு

  பரிகாரம்: 108 முறை காயத்ரி மந்திரம் உச்சரிக்கவும்.

  மிதுனம்:

  பணியிடத்தில் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தை வெளிக்காட்ட உள்ளீர்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள் அல்லது நிதி இழப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

  ராசியான எண்: 3

  ராசியான நிறம்: ப்ளூ

  பரிகாரம்: அனுமாருக்கு தேங்காய் படையல் வைக்கவும்.

  கடகம்:

  எந்தவொரு முக்கியமான காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் அன்புக்குரிய நபர்களிடம் ஆலோசனை செய்யவும். யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாதீர்கள் அல்லது மனக்காயம் ஏற்படும்.

  ராசியான எண்: 1

  ராசியான நிறம்: பச்சை

  பரிகாரம்: துர்கை அம்மனுக்கு சிவப்பு நிற பூ வைக்கவும்.

  சிம்மம்:

  தொழில்துறை மற்றும் வணிகம் ஆகியவை பெரும் முயற்சிகளின் மூலமாக பலப்படும். காதலர்களுடன் சந்திப்பு நடக்கலாம். உங்கள் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க உள்ளது.

  ராசியான எண்: 9

  ராசியான நிறம்: சிவப்பு

  பரிகாரம்: சிறு குழந்தைகளுக்கு பாயாசம் வழங்கவும்.

  கன்னி:

  பரஸ்பர பந்தங்கள் பலப்படும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன் உயர இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒழுங்கை கடைப்பிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.

  ராசியான எண்: 0

  ராசியான நிறம்: ஆரஞ்சு

  பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய்விளக்கு ஏற்றவும்.

  துலாம்:

  முடிவுகளை சாதுர்யமாக எடுங்கள். உங்களுக்கான வெற்றி நிச்சயம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது கடன் பெற வேண்டிய சூழல் ஏற்படும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

  ராசியான எண்: 8

  ராசியான நிறம்: கோல்டன்

  பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

  விருச்சிகம்:

  திடமான விஷயங்கள் மீது இன்று உங்கள் கவனம் இருக்கும். மிக அதிகப்படியான பசி எடுக்கலாம். எந்தவொரு வேலையும் முழு நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டுடன் செய்யவும்.

  ராசியான எண்: 2

  ராசியான நிறம்: பர்பிள்

  பரிகாரம்: அன்னை லெட்சுமிக்கு தாமரைப் பூ வைக்கவும்.

  தனுசு:

  ஒவ்வொரு நபரிடமும் நீங்கள் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டால் பணியிடத்திலும், வணிகத்திலும் வளர்ச்சி கிடைக்கும். தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் பணம் கிடைக்கும்.

  ராசியான எண்: 6

  ராசியான நிறம்: வெள்ளை

  பரிகாரம்: கருப்பு நாய்க்கு ஜிலேபி வைக்கவும்.

  மகரம்:

  இன்று உங்கள் தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். அனைத்து தரப்பில் இருந்தும் நற்செய்தி கிடைக்க இருக்கிறது.

  ராசியான எண்: 9

  ராசியான நிறம்: கருப்பு

  பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபருக்கு சேவை செய்யவும்.

  கும்பம்:

  புதிய கோணத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் அதிகரிக்கும். வாழ்வியல் மேம்பட இருக்கிறது. அதற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

  ராசியான எண்: 8

  ராசியான நிறம்: ப்ளூ

  பரிகாரம்: சர்க்கரை கலந்த உணவுகளை எறும்புகளுக்கு வைக்கவும்.

  மீனம்:

  மற்றவர்களின் தூண்டுதலுக்கு இரையாகி விடாதீர்கள். அது உங்களுக்கு பல இழப்புகளை ஏற்படுத்தும். கொள்கை விதிகளை கடைப்பிடிக்கவும். உறவினர்களுக்கு மதிப்பளிக்கவும்.

  ராசியான எண்: 6

  ராசியான நிறம்: பிங்க்

  பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

  First published:

  Tags: Astrology, Money, Rasi Palan