Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 12, 2022) பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நாள் ஆகும்.!

செல்வ வாக்கு | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 12, 2022) பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நாள் ஆகும்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 12) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேஷம்:

இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது இன்று பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சிறப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: பைரவர் கோயிலில் இனிப்புகள் வழங்கவும்

ரிஷபம்:

இன்று பல நிதி நன்மைகளை நீங்கள் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இடமாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தால் இன்று அதில்வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக பலம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
பரிகாரம்: துர்க்கை கோவிலில் துர்கா சாலிசா பாராயணம் செய்யவும்

மிதுனம்:

இன்று உங்களுக்கு உதிக்கும் புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகள் பணவரவிற்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சீனியரின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள். பெரியவர்களை மதிக்க வேண்டும், குடும்ப பிரச்சனைகளையும் பேசி தீர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: லைட் பிங்க்
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்து, விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்

கடகம்:

இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் எந்த ஒரு வேலையும் சிறப்பான பலன்கள் மற்றும் பணவரவை தரும். பணத்தை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டிருந்தால் அதற்கு முன் தகுந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறவும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்: கிருஷ்ணருக்கு இனிப்புகளை வைத்து படைக்கவும்

சிம்மம்:

இன்று உங்கள் மனம் சிதறி அமைதியின்றி இருக்க கூடும், எனவே மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஒரு சிறிய பயணத்தை திட்டமிடலாம். நீங்கள் செய்யும் பயணம் சிறியதாக இருந்தாலும் அதன் மூலம் உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
பரிகாரம்: கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவிய சப்பாத்தி கொடுக்கவும்.

கன்னி:

அறிமுகமில்லாதவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வெளியாட்களின் ஆலோசனையின் பேரில் எதிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க ஏற்படும். உங்களை சுற்றியுள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வீட்டில் சுப காரியங்கள் குறித்து விவாதம் எழும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஹனுமான் சாலீசாவை பாராயணம் செய்யவும்

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சொத்து விஷயத்தில் குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள். எனவே வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய திட்டங்கள் உங்களது பொருளாதார நிலையை சற்று மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 0
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்

விருச்சிகம்:

இன்று பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். இன்று முழுவதும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலீசாவை 7 முறை பாராயணம் செய்யவும்

தனுசு:

இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் பெரியளவில் ரிஸ்க் எடுக்க வேண்டாம், எடுத்தால் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களது தனிப்பட்ட தேவைக்காக கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்டம் நிறம்: சிவப்பு
பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை விடுவிக்கவும்

மகரம்:

பார்ட்னர்ஷிப் போட்டு செய்யும் தொழில் இன்று லாபம் தரும். இன்று உங்கள் குழந்தை தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: ஃபிரோஸி (டர்க்கைஸ்-ப்ளூ)
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு லட்டு படைக்கவும்

கும்பம்:

வியாபார ரீதியாக இன்றைய நாள் உங்களுக்கு இனிமையாக அமையும். எனினும் எதிலும் அவசரம் காட்டுவதை தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். சிறிது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
பரிகாரம்: ராமர் கோவிலில் ராம சரிதம் பாராயணம் செய்யவும்

மீனம்:

இன்று நீங்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பது லாபம் தரும். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான நடத்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். துன்பத்தில் இருப்பவருக்கு உதவ வாய்ப்பு ஏற்பட்டால் தயங்காமல் உதவுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: தாய்க்கு இனிப்பு வழங்கவும்
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி