Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 11, 2022) தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 11, 2022) தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 11) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேஷம்:

தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்துவது, நேரத்தை மட்டுமல்ல பண நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, புதிய வாய்ப்புகளையும் இழக்கும் நிலை ஏற்படலாம். உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பொருளாதார நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் வைத்து வழிபடவும்.

ரிஷபம்:

உடல் நலக்கோளாறுகள் தலைதூக்கலாம். அன்றாட தேவைகளுக்கே கடன் வேண்டிய நிலை ஏற்படும், இதனால் ஏற்கனவே இருக்கும் கடன் சுமை அதிகரிக்கும். வேலையில் ஏற்படும் பாதிப்பு, மன உளைச்சலை அதிகரிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடவும்.

மிதுனம்:

தினசரி தேவைகளை சமாளிக்கவே நிறைய செலவு செய்வது போல் தோன்றும். கொடுக்கப்பட்ட வேலையை நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பழிக்குப் பழி என்ற பாதையை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சூரியனுக்கு நீர் வழிபாடு செய்யுங்கள்.

கடகம்:

குடும்ப வாழ்க்கையில் இன்று பிரச்சனைகள் உண்டாக கூடும். கணவன் - மனைவிக்குள் அதிகரிக்கும் சண்டையால், வீட்டின் நிம்மதி பறிபோகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முடிக்க முடியாமல் போன வேலையைப் பற்றி கவலை வேண்டாம், விரைவில் அதனை செய்து முடிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: கோல்டன்
பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

சிம்மம்:

இன்று உங்களுடைய அதிர்ஷ்டம் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள், இது தகராறுகளை அதிகரிக்கலாம். பணம் இருக்கிறது என்பதற்காக செலவழிக்காதீர்கள், இது எதிர்காலத்தில் சிக்கலை உருவாக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
பரிகாரம்: மஞ்சள் நிற உணவுகளை தானம் செய்யவும்.

கன்னி:

திடீர் உடல் நலக்குறைவு வேலையை பாதிக்கக்கூடும். பெரியவர்களின் அட்வைஸை காது கொடுத்து கேட்கமாட்டீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திடீர் பண ஆதாயமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.

துலாம்:

பணியிடத்தில் இப்போது கஷ்டப்பட்டு உழைப்பது, எதிர்காலத்தில் புரோமோஷன், இன்கிரிமெண்ட் போன்ற வெகுமதிகளை தரக்கூடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த நோயில் இருந்து குணமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

விருச்சிகம்:

வேலையில் வெற்றி பெறுவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் பாசிட்டிவ் ஆற்றல் நிறைந்திருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: பாதாம்
பரிகாரம்: பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்

தனுசு:

தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள், அதேபோல் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களையும் செய்யாதீர்கள். பண்டிகை காலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: டர்க்கைஸ்-ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 2
பரிகாரம்: வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன்பு பெரியவர்கடம் ஆசி பெறுங்கள்

மகரம்:

அன்புக்குரியவர்களின் வார்த்தைகள் மனதில் பதிய வைக்கும். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். முடங்கிய வேலைகளைப் பற்றி கவலைப்படுவது இயல்பு, பொறுமையாக இருங்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஓம் நமச்சிவாய என 108 முறை ஜபிக்கவும்.

கும்பம்:

பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கலாம். நிதி நிலைமை மோசமாகலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள், எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் குடும்பத்தினரின் ஆதரவு சற்றே ஆறுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

மீனம்:

மாற்றம் பற்றிய கவலை இருக்கலாம். சகோதரர்களுக்குள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி டென்ஷன் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் பணத்தை எளிதாக திரும்ப பெறக்கூடிய ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி