Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10, 2022) நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10, 2022) நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்..!

பணம்

பணம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 10) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று பணி சார்ந்து சிறப்புக்குரிய நாளாக அமையும். பண லாபத்தை தரக் கூடிய சிறப்பான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும். காதலர்களுக்கு இடையிலான பந்தம் பலமானதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் குறித்து அஜாக்கிரதை வேண்டாம்.

ராசியான எண் - 5
ராசியான நிறம் - க்ரீம்
பரிகாரம் - மாடுகளுக்கு பாலக்கீரை கொடுக்கவும்.

ரிஷபம்:

இன்றைக்கு புதிய திட்டங்கள் கிடைக்கும். எதிர்காலத்தில் அவை பயனுள்ளதாக அமையும். சட்ட ரீதியிலான பிரச்சினைகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக அமையும்.

ராசியான எண் - 8
ராசியான நிறம் - வயலெட்
பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.

மிதுனம்:

குடும்ப வாழ்க்கையில் இன்று பிரச்சினைகள் உண்டாகக் கூடும். பெற்றோருக்கும், உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். காதலுக்கு நேரம் மிக முக்கியமானது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

ராசியான எண் - 8
ராசியான நிறம் - பச்சை
பரிகாரம் - ஏழைகளுக்கு ஏதேனும் வெள்ளை நிற பொருள் வழங்கவும்.

கடகம்:

இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக உங்கள் மீது பெரியவர்கள் அன்பு செலுத்துவார்கள். புதிய வணிகம் தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

ராசியான எண் - 3
ராசியான நிறம் - வெள்ளை
பரிகாரம் - பறவைகளுக்கு உணவளிக்கவும்.

சிம்மம்:

புதிய வேலைவாய்ப்புகள், வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் வர இருக்கின்றன. இன்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். பணிகளை சாதூர்யமாக தொடங்கவும். தினசரி பணிகளை முடிக்க தடை எதுவும் இருக்காது.

ராசியான எண் - 8
ராசியான நிறம் - ப்ளூ
பரிகாரம் - நாய்களுக்கு இனிப்பு வழங்கவும்.

கன்னி:

தற்போதைய திட்டப் பணிகளில் சில தடைகள் ஏற்படலாம். எந்தவித வாதம் அல்லது சச்சரவுகளையும் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை ஒத்தி வைக்கவும். சொத்து விஷயங்களை பேசி முடிக்கும் முன்பாக அனைத்து ஆவணங்களையும் கவனமாக சரி பார்க்கவும்.

ராசியான எண் - 8
ராசியான நிறம் - கிரே
பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி செய்யவும்.

துலாம்:

இன்றைக்கு நல்லதும், கெட்டதும் கலந்த நாளாக இருக்கிறது. எந்தவொரு வேலையை தொடங்குவதற்கு முன்பாகவும் தொடர்புடைய துறை வல்லுநர்களின் ஆலோசனையை கேட்கவும். வணிகத்தில் லாபம் குறைவாக இருக்கும். மொத்த விற்பனை தொழில் இயல்பாக நடக்கும்.

ராசியான எண் - 3
ராசியான நிறம் - இளம் பச்சை
பரிகாரம் - எறும்புகளுக்கு சர்க்கரை தீனி வைக்கவும்.

விருச்சிகம்:

வணிகத்தில் புதிய திட்டப் பணிகள் தொடங்க இருக்கின்றன. வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஒத்துழைப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையானதாக அமையும். முக்கியமான நபர்களை இன்று சந்திக்க உள்ளீர்கள்.

ராசியான எண் - 2
ராசியான நிறம் - ப்ளூ
பரிகாரம் - தீப விளக்கு ஏற்றவும்.

தனுசு:

கல்வி ரீதியாக வெற்றி பெறுவீர்கள். அது உங்களுக்கு பெயர், புகழை பெற்றுத் தரும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

ராசியான எண் - 10
ராசியான நிறம் - வெள்ளை
பரிகாரம் - பசு மாட்டுக்கு வெல்லம் கொடுக்கவும்.

மகரம்:

வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை. ஒரு வார்த்தை நீங்கள் தவறாகப் பேசினாலும் கூட அது பெரும் பிரச்சினையில் முடியும். வீட்டுக்கு வரும் விருந்தினரிடம் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

ராசியான எண் - 10
ராசியான நிறம் - கோல்டன்
பரிகாரம் - சரஸ்வதிக்கு வெள்ளை நிற பூக்களை படைக்கவும்.

கும்பம்:

நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். சிக்கலான பிரச்சனைகளுக்கு சமரச தீர்வுகளை எட்டுவீர்கள். கடன் பெற முடிவு செய்வீர்கள்.

ராசியான எண் - 3
ராசியான நிறம் - வான் நீலம்
பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடி வழங்கவும்.

மீனம்:

வணிகத்தில் உள்ள பார்ட்னர் அல்லது உடன் இருப்பவர்கள் மூலமாக பிரச்சினை வரலாம். வணிகம் சார்ந்த பயணங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. புதிய வேலைகளில் இன்று சேர வேண்டாம்.

ராசியான எண் - 1
ராசியான நிறம் - மஞ்சள்
பரிகாரம் - அனுமர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி