ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Horoscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...! (மார்ச் 05, 2020)

Horoscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...! (மார்ச் 05, 2020)

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology March05, 2020

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology March05, 2020

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology March05, 2020

 • 3 minute read
 • Last Updated :

  12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 04-03-2020

  மேஷம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 1, 5

  ரிஷபம்: இன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது  அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.தொட்டது துலங்கும் புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள் பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5, 6

  மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும் அரசால ஆதாயம் உண்டாகும் சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

  கடகம்: இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம்.  வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்  புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும்  வீண் கவலைகள் வந்து போகும்.  வியாபார ரகசியங்கள் வெளியில் கசிவது எவரால் என்பதை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம். அதிர்ஷ்ட எண்: 2, 9

  சிம்மம்: இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம். உத்யோகத்தில் உயரதிகாரி பொறுப்பாகப் பேசினாலும் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள்.புதிய ஒப்பந்தங்கள் தடைபட்டு முடியும்அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 9, 3

  கன்னி: இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது  செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நணபரும், உறவினரும் வலிய வந்து பேசுவார்கள். சுபச்செலவுகள் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம். அதிர்ஷ்ட எண்:  4, 6

  துலாம்: இன்று அடுத்தவர் குற்றச் சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  பணதேவை ஏற்பட்டாலும் அதை   திறமையாக சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்  மேலதிகாரி பாராட்டுவார்  சம்பளம் உயரும்  அதிகாரி மட்டத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்: 5, 6

  விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அரசியல் வாதிகள் தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு தெரியப்படுத்துங்கள்.வீணாக சேமிப்புகளைக் கரைக்க வேண்டாம்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்: 3, 7

  தனுசு: இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை  அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும் வீண் பேச்சுகளையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம். அதிர்ஷ்ட எண்: 2, 9

  மகரம்: இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள் உங்களின் கோரிக்கை மேலிடத்தால் ஏற்கப்படும் அது உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 9, 3

  கும்பம்: இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். பெண்களின் நீண்ட நாளைய கனவு நிறைவேறும் தடைபட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள் திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்  பூர்வீகச் சொத்துக்களை மாற்றியமைக்க முயற்ச்சிப்பீர்கள் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம். அதிர்ஷ்ட எண்:  4, 6

  மீனம்: இன்று கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.  சிறப்பாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள் சேமிப்பு கரையும் மனைவி வழியில் உதவி உண்டு. மனைவி வழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும் தந்தை வழிச் சொத்துக்களை கேட்டு வாங்க முயல்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்: 5, 6

  Published by:Vijay R
  First published:

  Tags: Rasi Palan