மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி புண்ணியம் பெற்றிடலாம்.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரகோசமங்கை கோயிலில் இந்த ஆருத்ரா தரிசனத்தின் போது பச்சை மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை எடுத்துவிட்டு அபிஷேக ஆராதனை நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டுமே இந்த மரகத நடராஜரை சந்தனக்காப்பு இல்லாமல் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நேற்றி டிசம்பர் 19ம் தேதி ஞாயிற்றுகிழமை தேர்த்திருவிழா கோவில் நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
டிசம்பர் 20ம் தேதியான இன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு சித்திரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிசம்பர் 21ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
மேலும் படிக்க... ஆருத்ரா தரிசன திருவிழா: சிதம்பரத்தில் கோலாகமாக நடந்த தேரோட்டம்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivan