ஆடி அமாவாசை இன்று... விரதம் இருக்கும் முறைகள் என்னென்ன?

ஆடி அமாவாசை

நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் ஆடி அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

 • Share this:
  ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். பித்ரு லோகத்தில் இருந்து ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பூமிக்கு வருகிறார்கள். இந்தநாளில், முன்னோரை வழிபடவேண்டும். அவர்களின் அருளையும் ஆசியையும் பெறவேண்டும்.

  இன்றைய தினம் ஆகஸ்ட் 08ஆம் தேதி ஆடி 22 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை. எப்போதும் அமாவாசை முதல்நாள், வீட்டை சுத்தம் செய்யுங்கள். ஒட்டடை முதலானவற்றை அகற்றுங்கள். பூஜையறையில் உள்ள பொருட்களை கழுவி சுத்தம் செய்துவிட்டு விளக்குகளை நன்றாக தேய்த்து வைக்க வேண்டும்.  அத்துடன், சுவாமி படங்கள், முன்னோர்களின் படங்கள் ஆகியவற்றைத் துடைத்து சுத்தம் செய்து மாட்டுங்கள். வீட்டைக் கழுவிவிடுவதோ துடைப்பதோ செய்யுங்கள். மறுநாள், அமாவாசை நாளில் பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும்.

  மேலும் படிக்க... பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக திட உணவு கொடுக்க போகிறீர்களா? அதற்கான நல்ல நாள், நேரம் குறித்த விவரங்கள்!

  ஆறு, குளம் முதலான நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்யலாம். அதன்பின்னர் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

  மேலும் படிக்க... ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...  அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெறும். விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

  மேலும் படிக்க... இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 08, 2021)

  காகத்திற்கு முதலில் உணாவிடுவது ஏன்?

  பின்னர், வீட்டில் செய்துள்ள சாம்பார், ரசம், காய்கறிகள், கூட்டு, சாதம் முதலானவற்றில் நெய்யும் விட்டு, காகத்துக்கு உணவிடுங்கள். முன்னதாக, காகத்துக்கு உணவிடும் இடத்தை தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திவிட்டு, பிறகு உணவளியுங்கள். காகம் என்பது நம் முன்னோர் அம்சம் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் அமாவாசை நாளில் முதலில் காகத்திற்கு உணவு அளிக்கப்படுகிறது. காகம் என்பது சனி பகவானின் வாகனம். எனவே காகத்துக்கு உணவிடுவதால், அமாவாசை வழிபாடு பூர்த்தி அடைகிறது.

  மேலும் நம் வழிபாட்டாலும் பூஜைகளாலும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள் அகம் குளிர்ந்து போகிறார்கள். இதனால் பித்ரு சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்றும் சனி முதலான கிரக தோஷங்கள் விலகும் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அத்துடன் முன்னோர் வழிபாடு, உங்களை முன்னுக்குக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.

  மேலும் படிக்க.. இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 08, 2021)

  முக்கியமான அமாவாசைகள் 3

  தட்சணாயன புண்ணியகாலம் தொடங்கும் ஆடி மாத அமாவாசையும், உத்ராயண புண்ணிய காலம் தொடங்கும் தை மாத அமாவாசையும், மற்ற அமாவாசைகளை விட முன்னோர் வழிபாட்டிற்கு சிறந்ததாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளயபட்ச அமாவாசையும் புண்ணிய தினமே. இந்த மூன்று அமாவாசை தினங்களிலும் அவசியம் முன்னோர்களுக்கு, திதி தர்ப்பணம் போன்றவைகளை கொடுக்க வேண்டும்.

  ஆடி மாதம் முதல் மார்கழி வரையான காலம் தேவர்களுக்கு இரவு நேரம். அப்போதுதான் நம் முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காகவும், ஆசீர்வதிப்பதற்காகவும் பித்ருலோகத்தில் இருந்து புறப்படுவார்கள். அவர்கள் வருகை தர வேண்டும் என்பதற்காக, ஆடி அமாவாசையன்று திதி, தர்ப்பணம் கொடுத்து அவர்களை அழைக்கின்றோம். நமது வேண்டுகோளை ஏற்று மகிழ்ச்சியுடன் வரும் அவர்கள், புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை அன்று பூலோகத்துக்கு வருகிறார்கள்.

  அப்படி வந்தவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக புரட்டாசியிலும் நாம் அவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அதனால் மகிழும் அவர்கள் நம்மை ஆசீர்வதித்து விட்டு, பிறகு தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்தை அடைவார்கள். இதன் காரணமாகவும், ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

  மேலும் படிக்க... ஆடி அமாவாசை அன்று இந்த கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: