மேஷம்:
உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்வதால் விரைவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில், உங்கள் போட்டியாளர்கள் உங்கள் வேலையில் பிரச்சனையை உண்டாக்க முயற்சிப்பார்கள். அலுவலகத்தில் மிகவும் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
உங்களின் நிதி பிரச்சனைகளும் தீரும். நிலுவையில் இருக்கும் எல்லா வேலைகளையும் பணிகளையும் முடிக்க ஒரு நண்பர் உங்களுக்கு உதவி செய்வார். இன்று பயணம் செய்தால், அது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
மிதுனம்:
உங்களின் அன்றாட வருமானம் உயர வாய்ப்புள்ளது. சர்வதேச பயணம் செல்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். தொழில் சம்பந்தமான முடிவுகளை இன்று எடுப்பது சாதகமாக இருக்கும்.
கடகம்:
நீங்கள் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர், வெளியிடங்கள் சார்ந்த விஷயங்களும் பொருளாதார ரீதியாக உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களைத் தேடி நல்ல வாய்ப்புகள் வரும்.
சிம்மம்:
அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல வெகுமதி கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இன்று பொருளாதார ரீதியாகவும் திருப்தியாக இருக்கும்.
கன்னி:
இன்று உங்களுக்கு பண வரவு யோகமாக அமையும். வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதை செயல்படுத்தலாம். இருப்பினும், உங்கள் போட்டியாளர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
துலாம்:
இன்று உங்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், நல்ல வேலை வாய்ப்புகளையும் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது சட்ட சிக்கல்கள் தீரக்கூடும்.
விருச்சிகம்:
உங்களின் நிதி நிலை மேம்படும். இன்று வணிகர்கள் நிறைவாக சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்கள் கனவு நிறைவேற, இலக்கை நோக்கி செல்லும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.
தனுசு:
பணப் பரிமாற்றம் மற்றும் பணம் தொடர்பான எந்த விஷயங்களையும் இன்று செய்ய வேண்டாம். உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பொருட்களை இழக்காமல் இருக்க நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
மகரம்:
இன்று வருமான உயர்வு கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் செய்ய இன்று சாதகமான நாள். பணியிடத்தில் வெற்றியும் மரியாதையும் கிடைக்கும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் ஒப்பந்தம் கிடைக்கும். உங்களுக்கு கண் முன்னே உள்ள வாய்ப்புகளைப் பெறத் தயங்காதீர்கள். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரி, உங்கள் கடின உழைப்பை அங்கீகரித்து பாராட்டலாம். நல்ல வெகுமதியும் கிடைக்கும்.
மீனம்:
அதிக செலவு காரணமாக உங்கள் பட்ஜெட்டில் தொந்தரவு ஏற்படலாம். எவ்வளவு மற்றும் எதற்கு செலவு செய்கிறீர்கள் என்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Money, Rasi Palan