Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (28 ஜூலை 2022) தினசரி வருமானம் அதிகரிக்கும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (28 ஜூலை 2022) தினசரி வருமானம் அதிகரிக்கும்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 28) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

இன்றைக்கு தினசரி வருவாய் பாதிக்கப்படும். தேவையற்ற செலவுகளை செய்ய நேரிடும். வணிகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அதிக செலவு இருக்காது.

ரிஷபம்:

நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்கால சேமிப்புக்கு முதலீடு செய்வது குறித்து சிந்திக்கலாம். தனியார் வணிகம் மூலமாக லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கலாம்.

மிதுனம்:

வணிகத்தில் உங்களுக்கு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். தினசரி வருமானம் அதிகரிக்கும். குடும்ப செலவுகள் நிலையானதாக இருக்கும்.

கடகம்:

ரசீதுகளுக்கு பணம் செலுத்துகையில் சில இழப்புகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களால் நிதி இழப்பு ஏற்படும். தினசரி வருவாய் மேம்படும். வங்கி சார்ந்த விஷயங்களால் சிக்கல்கள் உண்டாகக் கூடும்.

சிம்மம்:

குடும்பத்தில் உள்ள மாமனார், மாமியார் மூலமாக உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும். உங்கள் தாய்வழி குடும்பத்தில் இருந்தும் நிதி சார்ந்த உதவிகள் கிடைக்கும். வணிகத்தில் பெரிய வெற்றி கிடைக்காது.

கன்னி:

வணிகத்தில் சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். தேவையற்ற பயணம் மூலமாக பண விரயம் ஏற்படலாம். பொருளாதார சிக்கல் காரணமாக குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். ரியல் எஸ்டேட் வணிகம் லாபம் தரும்.

துலாம்:

சிலருக்கு பண உதவி செய்தது குறித்து நீங்கள் வருத்தம் அடையக் கூடும். திருமண வாழ்க்கையில் அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினசரி வருவாய் நிலையான அளவில் இருக்கும்.

விருச்சிகம்:

தினசரி வருமானம் மேம்படக் கூடும். இருப்பினும் பயணங்கள் காரணமாக தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். பரம்பரை சொத்துக்கள் குறித்து கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்:

இன்று சுய தொழில் செய்பவர்களுக்கு ராசியான நாள். நீங்கள் எதிர்பார்த்தபடி பண வருவாய் இருக்கும். எனவே நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு:

பொருளாதாரம் சூழ்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்களிடம் பெரிய உதவியை எதிர்பார்க்க கூடும்.

கும்பம்:

வணிகத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை உங்களுக்கு கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பாக கவனமுடன் சிந்திக்கவும். நிதி சார்ந்த பெரிய முடிவுகளை இன்றைக்கு எடுக்க வேண்டாம்.

மீனம்:

இன்றைக்கு பணம் சேமிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குடும்பச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். வணிகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தினசரி வருவாய் பாதிக்கப்படும். சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி