Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (27 ஜூலை 2022) பார்ட்னர்ஷிப்பில் நல்ல வருமானம் கிடைக்கும்.!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (27 ஜூலை 2022) பார்ட்னர்ஷிப்பில் நல்ல வருமானம் கிடைக்கும்.!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 27) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

உங்களுக்கு பல விதங்களில் வருமானம் வருவது அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது முக்கியம். இன்று நிதி ரீதியாக மிகச் சிறப்பாக இருக்கும். வணிகம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருக்கும் ஒரு நபரால் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப்பில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் விரைவில் வளர்ச்சி அடையும். இன்சூரன்ஸ் திட்டங்கள் கைகொடுக்கும்.

மிதுனம்:

குடும்பத்துடன் வெளியில் செல்வது என்றும் முக்கியமாக இருப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் சேமிப்பிற்கும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டை புதுப்பிக்கும் யோசனையில் இருந்தால், அதற்கு நிறைய செலவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பொருளாதார சூழல் மேம்படும்.

கடகம்:

பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் இன்று தீரும். உடல் ஆரோக்கியத்திற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். வணிகத்தில் நிலையான நிரந்தரமான வருமானம் கிடைக்கும். வீட்டுச் செலவுகளும் குறையும்.

சிம்மம்:

பார்ட்னர்ஷிப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். இன்று கடினமாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்காமல் போகாது. பிசினஸ் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி:

உங்கள் பெற்றோர்கள் இன்று உங்களுக்கு பணம் கொடுத்து உதவுவார்கள். ஆனால் அதை நீங்கள் பயணம் செய்வதில் தேவையில்லாமல் செலவு செய்யும் சூழல் ஏற்படலாம். குழந்தைகளின் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்களுடைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.

துலாம்:

வணிகத்தில் பல வழிகளில் வருமானம் வரும். களப்பணி லாபகரமாக அமையும். நிதி நிலைமை சீராகும். கூடுதலாக வேலை செய்வது நல்ல பாராட்டுக்களையும் வெகுமதிகளையும் கொடுக்கும்.

விருச்சிகம்:

சம்பள உயர்வு விரைவில் கிடைக்கும். அதே நேரத்தில் குடும்பச் செலவுகளும் அதிகரிக்கும். வணிகத்தில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகிறது. பணத்தை முதலீடு செய்வது லாபத்தை கொடுக்கும்.

தனுசு:

குடும்ப செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வட்டத்தில் இருந்து நெருக்கமானவர்களிடம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். பிசினஸ் வளர்ச்சிக்கு இன்று மிகவும் ஏற்ற நாள். வாகனங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

மகரம்:

மாணவர்களுக்கு அவர்களின் தந்தை நிதியுதவி செய்யக்கூடும். குடும்பத்தில் நிதி நிலைமை சீராகும். தினசரி வருமானம் அதிகரிக்கும். வணிகம் வளர்ச்சியடையும்.

கும்பம்:

அலுவலக ரீதியாக பயணம் செய்வது உங்களுடைய பட்ஜெட்டைப் பாதிக்கலாம். வீட்டில் நடத்தப்படும் பூஜைகள் மிகப் பெரிய செலவை ஏற்படுத்தக்கூடும். தற்போதைய நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லை.

மீனம்:

எதிர்காலத்துக்காக நீங்கள் முதலீட்டையும் சேமிப்பையும் மேற்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். வணிகத்தில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. பழைய கடன்களை அடைப்பீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money

அடுத்த செய்தி