Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (23 ஜூலை 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (23 ஜூலை 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 23) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று தங்கள் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறுவார்கள். இன்று படிப்படியாக உங்கள் அதிர்ஷ்டம் உங்களை தேடி வர தொடங்கும். இதன் மூலமாக உங்களுக்குள்ள நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இன்று நீங்கள் தொலைதூர சுற்றுலா செல்வதற்கான பயணத்தை திட்டமிடலாம். எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று நண்பர்களுடன் ஆலோசிக்கலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தற்போது நிரந்தரப் பயன்பாட்டில் உள்ள பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். மாலை நேரத்தில் உங்கள் வீட்டிற்கு ஒரு சிறப்பு விருந்தினர் வரலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக விரைவாக சென்று விடும். உங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இந்த வேகத்தை நிலையானதாக வைத்திருப்பது உங்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் நற்பெயர்கெட்டு போக கூடும். உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும் நல்ல காரியங்களை மட்டுமே செய்யுங்கள். தீங்கு தர கூடிய செயல்களை விலக்கி கொள்ளுங்கள்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களின் சகோதரி மற்றும் சகோதரன் மீது அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தின் நலனைப் பற்றியே சிந்திக்கிறீர்கள், அதனால் இன்றும் கூட உங்களுக்கு அவர்களைப் பற்றி சில கவலைகள் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று சுற்றுலா சென்று வருவது ஆனந்தத்தை தரும்.

சிம்மம்:

இன்று, சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபார சார்ந்த கவலைகள் அதிகம் இருக்கும். கடந்த சில நாட்களாக வியாபாரம் சீராக இல்லை என்பதால் சோகமான மனநிலை உண்டாகும். உத்யோகம், வியாபாரம் போன்ற துறைகளில் முழுமையான முன்னேற்றம் வேண்டுமென்றால் உங்களின் சோம்பல், சுகம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும். வாழ்வில் மேன்மை அடைய உங்கள் வேலையில் முக்கியமாக கவனம் செலுத்துங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். இருப்பினும், இன்றைய நாளின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வேலையை முழு உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சில காலத்திற்குப் பிறகு நீங்கள் சில நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு பிரச்சனையான நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிகாரபூர்வமான சிந்தனையால் உங்களுக்கே பிரச்சனைகளை உருவாகலாம். சமூகம் மற்றும் வணிகத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக எதிரிகள் உண்டாகலாம். இருப்பினும், உங்கள் தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தால் மட்டுமே இவர்களை நீங்கள் எதிர்கொள்ள முடியும். இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாதீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை, வியாபாரம் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் உங்களை பாதிக்க கூடும். எனவே உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். மோசமான சூழலாக இருந்தாலும் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று பழைய சொத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் உள்ளவர்களுடன் இணக்கமாக பழகுங்கள். மனச்சோர்வு தர கூடிய எண்ணங்களை உங்கள் மனதில் வர விட வேண்டாம்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் இன்று சில புதிய தொடர்புகளால் ஆதாயம் பெறுவார்கள். இன்று நீங்கள் தவறவிட்ட பணத்தை திரும்ப பெறுவீர்கள். அன்றாட வேலைகளில் எந்த வித அலட்சியமும் காட்டாதீர்கள். ஏனெனில் இது உங்களின் முன்னேற்றத்தை பாதிக்க கூடும். இன்று உங்களின் தொழில் முன்னேற்றம் அதிக நம்பிக்கையை தரும். இரவில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்:

இன்று, மகர ராசிக்காரர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும். இன்று கிரகங்களின் அனுகூலனால் உங்கள் அதிர்ஷ்டத்தில் முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொழிலில் லாபம் உண்டாகும். இன்று நீங்கள் நாள் முழுவதும் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் மத்தியிலும் நல்ல உறவு மேம்படும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள். மத ஸ்தலங்களுக்கு பயணம் செய்வது இன்று உங்களின் பண வரவை அதிகரிக்கும். இன்று தாய்வழி சொந்தங்களிடம் இருந்து அதிக ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உயர் அதிகாரிகளின் அனுகூலப் பலன்கள்நிறைந்த ஒன்றாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தொடங்குவது குறித்தும் இன்று முடிவெடுக்கலாம். உங்களின் ஆன்மிக உணர்வு இன்று அதிகரிக்கும். இன்று சில பயணங்கள் தற்செயலாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வது சிறப்பு. இதைச் செய்வதன் மூலம் அதிர்ஷடம் உங்களை தேடு வரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். படிப்பிலும் ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று சில பிரச்சனைகளால் பின்னடைவு ஏற்பட கூடும். இரகசிய எதிரிகள் மற்றும் பொறாமை கொண்ட நபர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெற்றோர் மற்றும் குருவின் ஆசியை பெற்று இந்த நாளை தொடங்குவது சிறப்பு.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Rasi Palan

அடுத்த செய்தி