மேஷம்:
இன்று உங்களுக்கு சிறந்த நாள், இன்று நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். உங்கள் வேலை பாராட்டப்படும், சிறந்தா மரியாதையும் கிடைக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று உங்கள் நாள் மிகச்சிறப்பாக அமையும். உங்கள் கவனம் புதிய திட்டங்கள் மீது இருக்கும். பயணம் செய்வது உங்களுக்கு வெற்றி தரும். சட்ட ரீதியான பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
மிதுனம்:
இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். படைப்பு மற்றும் கலைப்பணியில் ஈடுபட்டு உங்கள் நாளை செலவிடுவீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். மூத்தவர்களின் ஆதரவோடு புதிய திட்டங்களை பெற முயற்சிக்கலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளன. நீங்கள் எந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்தாலும் அதன் பலன் உடனே கிடைக்கும். முடியாமல் நீளும் வேலைகள் விரைவில் முடிவடையும். அலுவலகத்தில் உங்களுக்குக் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்:
இன்றைய நாள் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். ஆனால் மதம் மற்றும் ஆன்மீக சம்மந்தப்பட்ட விஷயங்களைப் படிக்கவும் எழுதவும் சிறிது நேரம் ஒதுக்குவது நல்லது. அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் வேலையில் தடையில் ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
கன்னி:
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது, நிதானத்தையும் எச்சரிக்கையையும் பின்பற்ற வேண்டும். அலுவலகத்தில், யாருடனும் விவாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்.
துலாம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். வியாபாரம் தொடர்பான சச்சரவுகள் அனைத்தும் இன்று தீரும். சொத்து விஷயத்தில் குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள்.
விருச்சிகம்:
இன்று உங்கள் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். நாள் முழுவதும் லாபம் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் நிலவும். வேலை அல்லது வியாபாரத்தில் புதுமைகளைக் கொண்டு வரும் முயற்சி, எதிர்காலத்தில் நல்ல பலன்களை தரும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் சிறிய ரிஸ்க் எடுப்பது பெரிய லாபத்தைத் தரும். உங்களின் அன்றாடப் பணிகளைத் தாண்டி பல்வேறு புதிய விஷயங்களையும் செய்யலாம். உங்களை சுற்றி புதிய வாய்ப்பு உள்ளது, அதை அடையாளம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு.
மகரம்:
இன்று ஒரு சாதாரண நாள். பார்ட்னர்ஷிப் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இன்று உங்கள் மகன் மற்றும் மகள் சார்ந்த ஒரு பெரிய முடிவை எடுக்கும் சூழல் ஏற்படலாம். எல்லாவற்றையும் மிகவும் கவனமாக செய்யுங்கள்.
கும்பம் :
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காலநிலை மாற்றத்தால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். உணவில் கவனம் தேவை. வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக இருக்கும். அவசரத்தில் சில தவறுகள் நடக்கலாம், எனவே எல்லாவற்றையும் கவனமாக செய்யுங்கள்.
மீனம்:
இன்றைய நாள் அதிக நன்மை தரும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தல் லாபம் பெறுவீர்கள். பொறுமை மற்றும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகளை சரிசெய்யலாம். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, இதுவரை நீங்கள் தொலைத்தவற்றை அனைத்தையும் நீங்கள் பெறலாம். கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Rasi Palan