ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களின் கனவுகள் நனவாகும் நாள் இன்று (2 ஜூன் 2022)..!

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களின் கனவுகள் நனவாகும் நாள் இன்று (2 ஜூன் 2022)..!

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஜூன் 2 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் விரும்பியதை செய்யவும். இன்றைக்கு உங்களுக்கு எல்லா விதமான சௌகரியங்கள் மற்றும் பணப்பலன் ஆகியவை கிடைக்கும். இலக்குகளை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் மூத்தவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். உறவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் தருணம் இது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - இன்று தயிர் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று காதல் உணர்வுகளை வெளிப்படுத்த, ஷாப்பிங் செய்ய, புதிய வாய்ப்புகளை பெற மற்றும் கருணை காட்டுவதற்கு சிறப்பான நாள் ஆகும். கடவுளுக்கும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அன்புக்குரியவர்களுடன் உணர்வுப்பூர்வமான நேரத்தை செலவிடலாம். இன்றைக்கு உங்கள் கனவுகள் நனவாகும். வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விற்பனை பிரிவில் பணியாற்றும் நபர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்றைய தினம் அனைத்து பிரச் னைகளுக்கும் தீர்வு காணலாம். தேவையற்ற கவலைகளை மறந்துவிட்டு, இன்று உண்மையை பேசவும். உங்கள் நண்பர்களை ஈர்ப்பதற்கு சிறந்த நாள் ஆகும். கல்வி கற்பித்தல், பொதுமேடை பேச்சு, நடனம், சமையல், டிசைனிங், வங்கி சேவை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் மஞ்சள் தானமாக கொடுக்க வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினத்தை உங்கள் நண்பர் அல்லது பார்ட்னருடன் செலவிடவும். எதிர்காலத்திற்கான திட்டமிடல்கள் இன்று இருக்கும். வாடிக்கையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டங்கள் பாராட்டுக்குரியதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்தவித குழப்பமும் இல்லாமல் மகிழ்ச்சி ஏற்படும். காவி நிற இனிப்புகளை இன்று கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு துணிகளை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனிப்பட்ட பிரச்சினைகளை கையாளும் திறன் உங்களிடம் இருக்கிறது. இன்றைக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நேர்காணல்களுக்கு செல்வது மற்றும் காதலை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாளாகும். பயணம் காதலர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும். தொழில் ரீதியிலான நபர்கள் அல்லது வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கையை பெறுவீர்கள். பழைய நண்பரை நீங்கள் சந்திக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றவர்களுக்கு பச்சை நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பம் அல்லது உறவினர்களுக்கு மிகவும் பிடித்த நபராக நீங்கள் இருப்பீர்கள். ஆகவே பெரியவர்களிடம் இருந்து அன்பும், ஆசிகளும் உங்களுக்கு கிடைக்கும். ஏராளமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு வர வாய்ப்பு உள்ளது. வணிகம் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான புத்திகூர்மை உங்களுக்கு இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது குழந்தைகளுக்கு சர்க்கரை வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்கனவே மிகுந்த சுறுசுறுப்பு உடையவர் நீங்கள். அதற்கு தகுந்தாற்போல இன்றைய நாள் அமைய இருக்கிறது. உங்கள் பொறுப்புகளை நீங்கள் அதிகரிக்க வேண்டாம். ஆனால், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். இன்று பெண்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஆகும். எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண வாய்ப்புகளை பரிசீலனை செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற மசாலா பொருள்களை கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் கனவுகள் நனவாகக் கூடும். சட்ட வழக்குகளில் பணத்தை கொடுத்து சமரச முடிவுகளை எட்டுவீர்கள். அதே சமயம், பொறாமையை கைவிட வேண்டும். இன்று நாள் முழுவதும் பணப் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டியிருக்கும். உடல் நலன் காக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தானம் செய்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாய்ப்புகளை ஏற்பதற்கு, புதிய இடங்களுக்கு செல்ல மற்றும் புதிய உறவுகளை ஏற்றுக் கொள்ள சிறப்பான நாள் ஆகும். காதல் செய்பவர்கள் தயங்காமல் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அரசியல், மீடியா, நிதி அல்லது கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்வீர்கள். வணிகத்தில் எதிர் பாலினத்தவர்கள் மூலமாக லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - குழந்தைகளுக்கு பேனா தானமாக கொடுக்கவும்.

ஜூன் 2 அன்று பிறந்த பிரபலங்கள் : சோனாக்‌ஷி சின்ஹா, நிதித் பரத்வாஜ், மணிரத்னம், இளையராஜா, சௌந்தர்ராஜன்

Published by:Selvi M
First published:

Tags: Numerology