முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று ஜூலை 19, 2022) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று ஜூலை 19, 2022) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • 2-MIN READ
  • Last Updated :

மேஷம்:

உங்கள் மனதுக்குள் தோன்றும் பாதுகாப்பின்மை, உணர்ச்சி பாதிப்பு மற்றும் நம்பிக்கை சிக்கல்களை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இன்று உங்களுக்கு இருக்கும் வேலைகள் கூடுதல் சோர்வை ஏற்படுத்த கூடும், ஆனால் சோர்வை ஒரு பொருட்டாக கருதாமல் அதை கடந்து சென்றால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஸ் குவார்ட்ஸ்

ரிஷபம்:

நீங்கள் எப்போதும் திட்டமிட்டதை விட அதிகமாக செய்து முடிப்பீர்கள் என்றாலும் தேவையில்லாத மன உளைச்சல், குழப்பம் போன்றவை தாமதத்திற்கு இன்று வழிவகுக்கலாம். எதை பற்றியாவது அல்லது யாரை பற்றியாவது எந்த ஒரு உறுதியான முடிவுகளுக்கு வரும் முன் உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு முடிவெடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புஷ்பராக கல்

மிதுனம்:

இன்று நீங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது மனைவியிடமிருந்து தேவையான உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள். இன்றைய உங்கள் நாளில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் ஆசையின் திசையை நோக்கிய ஒரு ஆரம்ப படியாக இருக்கலாம். எனினும் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைரைட் கிரிஸ்டல்

கடகம்:

இன்று நீங்கள் நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் பார்ட்னர் இன்று உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். மேலும் உங்களுக்கு சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார். வரவிருக்கும் விடுமுறை நாட்களில் எங்கே வெளியே செல்லலாம் என்பதை இன்று திட்டமிடுவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல கிரிஸ்டல்

சிம்மம்:

இவ்வளவு நாட்கள் உங்கள் வேலையில் இருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக இனி தீரும். நீங்கள் உங்களை ஒரு தைரியமான நபராக நினைத்து கொண்டிருப்பதை இன்று உங்களுக்கும், பிறருக்கும் நீங்கள் நிரூபிக்க வேண்டியிருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களது ஆதரவு பெரிய அளவில் தேவைப்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு க்ளியர் குவார்ட்ஸ்

கன்னி:

உங்கள் வழக்கத்தில் நீங்கள் பல நாட்களாக நினைத்து கொண்டிருக்கும் மாற்றங்களை செயல்படுத்த இன்று ஒரு நல்ல நாள். இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஒன்று உங்கள் பணியிடத்தில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கலாம். அக்கம்பக்கத்தினர் விஷயங்களில் தலையிடாமல் விலகி இருப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகதம்

துலாம்:

உங்களது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள யாராவது முயற்சி செய்யலாம். எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் பேச்சில் கவனம் வேண்டும். சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் இன்று நடக்கும் சில மாற்றங்களை அப்படியே ஏற்று கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அதிர்ஷ்ட கல்

விருச்சிகம்:

நீங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து வேலைக்கு சேர சொல்லி உங்களுக்கு இன்று அழைப்புகள் வரலாம். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையை தவிர வேறு ஆதாரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான யோசனை உங்கள் மனதில் தோன்றலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செவ்வந்திக்கல்

தனுசு:

சிறந்த திறனுடன் செயல்பட்டால் நீங்கள் இன்று ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியை ருசிக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை இன்று முடித்து விடுவீர்கள். நீங்கள் ஒரு ஆத்ம துணையைத் தேடிக்கொண்டிருந்தால், விரைவில் ஒருவரைச் சந்திக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சங்கு

மகரம்:

இன்று மட்டுமல்ல இன்னும் சில நாட்களுக்கு யார் கடன் கேட்டாலும் கொடுப்பதை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கையின் இயக்கவியல் மாற்றத்திற்கு உட்படலாம். எனவே நிலையாக இருக்க உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஜேட் தாவரம்

கும்பம்:

இன்று நீங்கள் ஒரு கடினமான இடம் அல்லது சூழலில் நுழைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையால் நீங்கள் சோர்வாக மற்றும் எரிச்சலாகவும் உணரலாம். சிறிது ஓய்வு இன்று உங்களுக்கு மிகவும் அவசியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சால்ட் லேம்ப்

மீனம்:

வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் அதற்கு இன்று நல்ல நாள். உங்கள் குழந்தைக்கு ஒரு புகழ்பெற்ற பள்ளியில் அட்மிஷனுக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், இன்னும் அதிகம் மெனெக்கெட வேண்டும். உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள கொஞ்சம் போராட்டம் அதிகம் இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மார்பிள் டேபிள்

First published:

Tags: Oracle Speaks