Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் சொத்துகளில் முதலீடு செய்ய சிறந்த நாள் இன்று (14 ஜூன் 2022)..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் சொத்துகளில் முதலீடு செய்ய சிறந்த நாள் இன்று (14 ஜூன் 2022)..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 14 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இன்று உங்கள் வேலையில் உயர் பதவியை பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் சில அதிர்ஷ்டத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், வெகுமதிகள் அல்லது ஆதரவைப் பெறுவதால் புன்னகை சூழ்ந்த ஒரு அழகான நாளாக இன்று அமையும். நகை வியாபாரிகள், பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ், உலோகம், தானியங்கள், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் வியாபாரம் செய்பவர்கள் இன்று லாபத்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்கள்: 1 மற்றும் 5
தானம்: கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானமாக வழங்குங்கள்

#எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

காதல் உறவுகளில் உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக வேலை செய்வதால் சிரித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கான புதிய வழி இன்று பிறக்கும். குழந்தைகள் தங்கள் செயல்திறன் முடிவுகளில் தன்னம்பிக்கையை பெறுவார்கள், ஆனால் சிலவற்றில் தாமதம் ஏற்படும். உங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. காதல் தம்பதிகளின் உறவு பலமாக மாறும். முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணல்களின் போது கடல் பச்சை நிற உடையை அணிவது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்காலத்தில் உதவி தேடுவதற்காக பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்கள் இன்று சிறப்பான வெற்றியை பெற வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
தானம்: ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்

#எண் 3: ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு இரண்டும் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய வளர்ச்சியை தரும். இன்று அமைதியாக இருக்காமல் பல விஷயங்களை செய்வதற்கான திட்டங்களை தீட்டுங்கள். கற்பனை திறன் அதிகம் கொண்ட நபர்களுக்கு முதலீடு மற்றும் லாபத்திற்கான சிறந்த நேரம் இன்று அமையும். ஒரு நினைத்த விஷயத்தை தொடங்கி அதில் இன்று வெற்றியும் கிடைக்கும். கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திக்க வணிகர்கள் திட்டமிடலாம்.

அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் :வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
தானம்: ஆசிரமங்களுக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4: (4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

பணியிடத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் பெருகும். மேலும் அது முழுவதும் நேர்மறையாகவும் நிலையானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும். மார்க்கெட்டிங் உத்திகளை செயலில் வைத்துக் கொள்ளுங்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் நல்லதே நடக்கும். செய்ய கூடிய காரியங்களை துணிச்சலாக செய்ய கற்று கொள்ளுங்கள். இன்றைய நாள் குழப்பமாகவும் நோக்கமற்றதாகவும் தோன்றினாலும், மாலை நேரத்திற்கு பின் உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஆனால், நட்பு அல்லது உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அசைவம் அல்லது மதுவை இன்று தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: டீல்
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: ஏழைகளுக்கு வெஜ் உணவை தானம் செய்யுங்கள்

#எண் 5: (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

அதிர்ஷ்டத்தின் சக்கரம் உங்கள் இலக்கை அடைய உதவும். இன்று ஆதிக்கம் செலுத்துவதை நினைவில் கொள்ளுங்கள், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் மேம்பட்ட வளர்ச்சி, இரண்டையும் அனுபவிக்க முடியும். இன்று பங்குகளை வாங்கவும், போட்டிகளில் விளையாடவும், போட்டியை எதிர்கொள்ளவும் சிறந்த நாள். சகல சுகபோகங்களுடனும் இன்று ஒரு சிறு பயணத்திற்கு செல்வீர்கள். ஒரு சிறப்பு நபரை சந்திக்கும் வாய்ப்பு இன்று உங்களுக்கு அமையலாம். நீங்கள் விரும்புவதை இன்று வாங்குங்கள், அது பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, அனைத்தும் சிறப்பாக நடக்கும். இன்று பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்யலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் சிறப்பு நண்பர் அல்லது வழிகாட்டியை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் புதன்
அதிர்ஷ்ட எண் 5
தானம்: பசுமை செடிகளை தானம் செய்யுங்கள்

#எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

திருமண வாழ்க்கை இன்று தம்பதிகளிடையே அதிக நம்பிக்கையையும் வலுவான பிணைப்பையும் உருவாக்கும். அனைத்து இலக்குகளும் இன்று நிறைவேற்றப்பட்டு, ஒரு வெற்றியாளராக உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகள் களத்தில் வெற்றியை தக்கவைக்க வேண்டியது மிக அவசியம். இல்லத்தரசிகள் உங்கள் குடும்பத்தினரால் மதிக்கப்படுவீர்கள். இன்று உங்கள் மீது எல்லோரும் பாசமாக இருப்பார்கள். இன்றைய நாளை சிறப்பாக மாற்ற நம்பிக்கை அவசியம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடும். கலைஞர்களால் வெகுஜனத்தை ஈர்க்க முடியும். சொத்துப் பரிவர்த்தனைகள் இன்று எளிதாகக் கைகூடும். திருமண முயற்சிகள் உங்களுக்கு வெற்றி அடையும்.

அதிர்ஷ்டமான நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 2
தானம்: குழந்தைகளுக்கு நீல பென்சில் அல்லது பேனாவை தானம் செய்யுங்கள்

#எண் 7: (7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் முதிர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் மீது அன்பும் பாசமும் காட்டுவார்கள். எனவே இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்றைய நாளைத் தொடங்குவதற்கு முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுங்கள். இன்று மஞ்சள் நிற பருப்பை தானம் செய்ய மறக்காதீர்கள். உங்களின் வியாபாரம் அதிகம் லாபம் பெற கூடும். இன்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளையும் கண் மூடித்தனமாக பின்பற்றலாம். ஏனெனில் இன்று உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வெற்றியுடன் செல்ல வேண்டிய நாள் இன்று.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண் 7
தானம் : தாமிர பாத்திரத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பு இன்று எந்த சிரமத்திலிருந்தும் வெளியே வருவதற்கு உங்களுக்கு உதவும். இன்று கால்நடைகளுக்கு தொண்டு செய்வது பல ஆபத்துகளில் இருந்து உங்களை காக்கும். தம்பதிகளிடையே காதல் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் இன்று சிறந்த நாள். மன அழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், எனவே தூங்குவதற்கு முன் யோகா பயிற்சிகளை செய்து வருவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6
தானம்: குழந்தைகளுக்கு துணியை தானம் செய்யுங்கள்

#எண் 9: ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் உடல் ஆரோக்கியத்தை எப்பொழுதும் கவனித்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள். பங்குகளைத் தவிர மற்ற வணிக முதலீடுகளைச் செய்ய இன்று சிறந்த நாள். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களை சுற்றி சில சிக்கலானவர்களும் இருக்க கூடும். உங்களின் முடிவுகளை தீர்க்கமாக எடுக்க கற்று கொள்ளுங்கள். மேலும் இந்த நாள் இளைஞர்கள் தங்கள் வாய்ப்புகளை அதிகம் பெறுவதற்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் திட்டங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வெகுஜனப் பேச்சு, நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி நடத்துவது, நகைகளை வாங்குவது, ஆலோசனை அல்லது விளையாட்டு விளையாடுவது போன்றவற்றை செய்ய இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6
தானம்: பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

ஜூன் 14 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஜூபின் நௌதியால், குமார் மங்கலம் பிர்லா, அகபருதீன் ஓவைசி, கிரண் கெர், ராஜ் தாக்கரி, கணேஷ் ஆச்சார்யா, பிரீதம், சேகர் சுமன்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி