ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண்கணித பலன்கள்

எண்கணித பலன்கள்

Numerology | விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன் குறித்து ஒரு பார்வை..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருந்தால் உங்களது பிறந்த தேதியில் 2, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இதில் எண் 2 என்பது நபரின் சுறுசுறுப்புத் தன்மையை குறிக்கும். ஒருவருடைய பிறந்த தேதியில் என் 2 நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அவரால் சிறிது நேரம் ஓரிடத்தில் நிலையாக உட்கார்ந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சுறுசுறுப்பானவராக அவர்கள் இருப்பார்கள் மேலும் மற்றவர்களுடன் மிக விரைவாக நட்பை ஏற்படுத்தி பழகும் தன்மையுடையவராக இவர்கள் விளங்குவதால் தொழில் ரீதியாக இது இவர்களுக்கு நன்றாக கைகொடுக்கும்.

மேலும் தினசரி நடவடிக்கைகளிலும் உணவு கட்டுப்பாட்டிலும் சரியாக இருப்பார்கள். விளையாட்டு வீரராக இருப்பவருக்கு கண்டிப்பாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமான உணவு பழக்கமும் தேவை. எண் 7 ஐ எடுத்துக் கொண்டால் இதுவும் சுறுசுறுப்பான தன்மையை குறிக்கிறது. ஒருவேளை ஒரு நபருடைய பிறந்த தேதியில் எண் 7 இல்லாமல் இருந்தால் அவர் எப்போதும் மந்தநிலை உடையவராகவே இருப்பார். எண் 7 ஆனது நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு எண்ணாகும்.

எண் 7 தனது பிறந்த தேதியில் இருப்பவர்கள் விளையாட்டு துறையில் இருந்தால் அவர் மகத்துவமான ஞானத்தை பெற்றிருப்பார். அந்த ஞானத்தினால் மைதானத்திலும் அல்லது மைதானத்திற்கு வெளியேவும் கூட மிக சரியான முடிவுகளை எடுத்து, சரியான பாதையில் தன்னையும் தன் அணியையும் வழிநடத்தக்கூடிய தலைமைப் பண்பு உடையவராக இருப்பார்கள். உதாரணத்திற்கு உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் தங்களுடைய ஜெர்ஸி எண்ணில் எண் 7 ஐ பயன்படுத்துவார்கள்.

எண் 6 மனம் ஒருமுகப்பட்ட செயல்பாட்டை குறிக்கிறது. இந்த எண்ணை தனது பிறந்த தேதியில் உடையவர்கள் பொறுப்புடையவராகவும் தன்னம்பிக்கை உடையவராகவும் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவராகவும் இருப்பார்கள் அது மட்டும் இன்றி இவர்கள் தங்களது இலக்கை முன்னரே தீர்மானித்துக் கொண்டு அதற்கு ஏற்ப கடினமாக உழைத்து முன்னேறுவார்கள். இதனால் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வந்து சேர்வதோடு கடின உழைப்பின் மூலம் தாங்கள் விரும்பிய இலக்கை அடைந்து மிகப்பெரும் நிலையை அடைவார்கள்.

மேலும் எண் 6 ஆனது வேலையிலும் சமுதாயத்திலும் நல்ல அந்தஸ்துடையவராகவும் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய நபராகவும் இருப்பார்கள். மேலும் எண் 6 ஐ உடையவர்கள் திறமையை வெளிப்படுத்துவராகவும் நல்ல ஒருங்கிணைப்பாளராகவும் சரியான வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி முன்னேறுபவராகவும் இருப்பார்கள்.

ஒருவேளை உங்களது பிறந்த தேதியில் மேலே சொன்ன இந்த எண்கள் இல்லையெனில் முடிந்த அளவு உங்கள் மொபைல் எண்ணில் இந்த எண்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்குரிய நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்.

தானம்: பிச்சைக்காரருக்கு மஞ்சள் அரிசியை ஞானம் அளிக்க வேண்டும்.

காலை வேலைகளில் உங்கள் குருவின் உருவப்படத்திற்கு முன்போ அல்லது துளசி செடிக்கு முன்போ தீபம் ஏற்றி குரு மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

First published:

Tags: Numerology, Tamil News