ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஆசிரியர்களுக்கான இன்றைய (10 டிசம்பர் 2022) எண் கணித பலன்கள்.!

ஆசிரியர்களுக்கான இன்றைய (10 டிசம்பர் 2022) எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஆசிரியர் அல்லது பயிற்றுநர்களுக்கான இன்றைய (10 டிசம்பர் 2022) எண் கணித பலன் குறித்து ஒரு பார்வை..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பிறந்த தேதியில் 1, 3 மற்றும் 9 ஆகிய எண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்க வேண்டும். எண் 1 என்பது எண்ண வெளிப்பாடுகளுக்கான எண் ஆகும். இது ஆசிரியர்களுடன் இணைந்து இருக்க வேண்டும். மாணவர்கள் அல்லது பெருந்திரள் முன்னே நீங்கள் பேசப் போகும் விஷயத்தை சரியாக புரியும்படி எடுத்துரைப்பது அல்லது வெளிப்படுத்துவது மிக முக்கியமாகும்.

மாணவர்களுக்கு கற்றலை ஆர்வம் மிகுந்ததாக மாற்ற வேண்டும் என்றால் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை எடுத்துப் பேசுவது அவசியம் ஆகும். ஆக, ஆசிரியர்களுக்கு எண் 1-இல் இருந்து வரும் எண்ண ஓட்டங்களை கொண்டிருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமல்லாமல் தலைமை பண்பு மற்றும் கூட்டத்தை சந்திப்பதற்கான தைரியம் ஆகியவற்றை இந்த எண் வழங்குகிறது.

வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டிய சிறப்பு மிகுந்த சொல் திறன்களை தருவதாக எண் 3 அமைகிறது. இது மட்டுமல்லாமல் உறவுகளை கட்டமைக்கவும் எண் 3 அவசியம் ஆகிறது. மாணவர்களுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. ஒரு நபரை சுறுசுறுப்பாக வைக்கவும், சிந்தனைகள் நிறைந்தவராகவும், 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட வகுப்பறையை எதிர்கொள்ளவும் எண் 3 உதவிகரமாக அமைகிறது.

அதேபோல ஒரு நபருக்கு தேவையான தைரியம் மற்றும் ஆற்றலை தருவதாக எண் 9 அமைகிறது. பிறர் மீது கவனம் செலுத்துபவராகவும், பிறருக்கு சேவை செய்யும் எண்ணம் உடையவராகவும் மாற்றுகின்றது. இந்த எண்ணுடன் தொடர்புடைய குணாதிசயங்கள், மாணவர்களுடன் நீண்ட கால பந்தத்தை உருவாக்குகிறது.

இப்போது விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட மூன்று எண்களில் ஏதேனும் இரண்டு எண்கள் உங்கள் பிறந்த தேதியில் இருக்குமானால் நீங்கள் மிக சிறப்பான ஆசிரியராக இருப்பீர்கள். ஒருவேளை உங்கள் பிறந்த தேதியில் இந்த எண்கள் இல்லை என்றால், அதனை உங்கள் மொபைல் எண்ணில் கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் ஆசிரியர் பணி சிறக்க உதவியாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவில் அல்லது ஆசிரமத்தில் மஞ்சள் தானம் செய்யவும்.

உங்கள் வகுப்பறையின் வடக்கு திசையில் மஞ்சள் நிற செயற்கை பூ ஒன்றை வைக்கவும் மற்றும் எப்போதும் மஞ்சள் பூ ஒன்றை உடன் வைத்திருக்கவும்.

First published:

Tags: Numerology, Tamil News