ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருவண்ணாமலை வசந்த உற்சவம்: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கோலாகலமாக தொடக்கம்

திருவண்ணாமலை வசந்த உற்சவம்: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கோலாகலமாக தொடக்கம்

திருவண்ணாமலை வசந்த உற்சவம்

திருவண்ணாமலை வசந்த உற்சவம்

சித்திரை திருவிழா என்பது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வசந்த உற்சவம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்.

  சித்திரை மாதம் பல புதிய விஷயங்களின் தொடக்கமாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் உற்சவங்களும், திருவிழாக்களும் நடைபெறுத் தொடங்கும். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மற்றும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இந்த ஆண்டு வசந்த உற்சவம் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பக்தர்களுக்கு உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் இந்த ஆண்டு பக்தர்கள் கலந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த உற்ச்சவத்துக்கான பந்தக்கால் நடுவிழா நேற்று கோவிலில் நடைபெற்றது.

  சித்திரை திருவிழா என்பது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வசந்த உற்சவம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆலங்காரம் என்று நள்ளிரவு வரை உற்சவம் களைகட்டும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் இன்று தொடங்கியது.

  பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த உற்சவத்தின் சிறப்பு, வசந்த காலத்தின் வருகையை அன்பை, காதலை கொண்டாடுவதும் ஆகும். மேலும், இந்த உற்சவம், நெருப்பு அம்சமாக வீற்றிருக்கும் சிவபெருமானை குளிர்விக்க நடைபெறுகிறது என்று புராணங்கள் கூறுகிறது.

  அழகுக்கு அதிபதியான ரதி தேவி, சிவபெருமானின் மகள் மற்றும் ரதியின் கணவன் காதலுக்கு அதிபதியான மன்மதன். மன்மதன் சிவபெருமானின் தவத்தை கலைத்த காரணத்தால், சிவனால் எரிக்கப்படுகிறான். ரதி தேவி சிவனிடம் மன்றாடி, மீண்டும் மன்மதனை உயிர்பிக்குமாறு வேண்டுகிறாள். மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார் சிவபெருமான். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வருகிறான் மன்மதன். அதைத் தொடர்ந்து, சினமுற்ற சிவனை அமைதியாக்க, அவரின் நெருப்பு சொரூபமான திருவண்ணாமையில், மன்மத தகனம் நடைபெற்று வருகிறது. தகனத்தைத் தொடர்ந்து, சாம்பலில் இருந்து மன்மதன் மீண்டும் உயிர் பெற்றதும் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

  வசந்த உற்சவத்தின் பத்தாவது நாள் சித்திரை மாத பௌர்ணமி, அதாவது பௌர்ணமிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி அன்று நடைபெறும். அத்துடன் உற்சவம் நிறைவடையும்.

  சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கலவையான அர்த்தநாரீஸ்வரர் வடிவில், இறைவன் சோமஸ்கந்தா தான் இந்த உற்சவத்தின் மூலவர். இவருடைய சந்நிதி, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. அலங்கரிக்கப்பட்டு, சந்நிதியில் இருந்து எடுத்து வரப்படும் இவரை பூப்பந்தல் அலங்காரம் செய்யப்பட்ட முதல் மண்டபத்தில் வைத்து பூஜிக்கப்படுவார்.

  விநாயாகர், முருகர், ரிஷப வாகனம், அம்மன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்நிதியில் இருக்கும் சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, பூக்கள், ஆபரணங்கள் மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாடவீதி முழுக்க வலம் வரப்படும்.

  இந்த உற்சவத்தின் சிறப்பே, சன்னதியில் இருந்து அலங்காரம் செய்யப்பட்டு கொண்டு வரப்படும் சாமி, முன் பிரகாரத்தில் இருக்கும் கண்ணாடி முன்பு ஆடிய படியே வரும். பல்லக்கில் சாமியை தூக்கி வரும் பக்தர்கள், அழகாக ஆடியபடியே கொண்டு வருவார்கள்.

  மேலும், கோவிலுக்கு உள்ளேயே உட்பிரகாரமாக தினமும் இரவு பிரதட்சணம் செய்யப்படும். அருணாச்சலேஸ்வரர் ஸ்தல விருட்சத்தின் மகிழ மரத்தின் அருகில், கந்தர்வக் கன்னி பெரிய நாயகர் மற்றும் நாயகிக்கு அர்ச்சனை செய்ய காத்திருப்பாள். கந்தர்வக் கன்னியாக அழகான பொம்மை அலங்கரிககப்பட்டு, சாமி ஊர்வலம் வரும் போது, பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Tiruvanamalai