திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வாராஹி அம்மன்

வாராஹி அம்மன் மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால் போன்ற மங்கள பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

  • Share this:
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் யாகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பெரும்புலியூரில் ஆஷாட நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான இன்று சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு வாராஹி அம்மன் மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால் போன்ற மங்கள பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து வாராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஞ்சள் அலங்காரத்தில்  அம்மனை தரிசனம் செய்வதால் தனம் ,வாக்கு, குடும்பம், தொழில் அபிவிருத்தி கடன் இல்லாத வாழ்க்கை குழந்தைகளுக்கு நல்ல கல்வி, போன்றவை சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக  உள்ளது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: