ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி : நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி : நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக 10 ஆயிரம் ரூபாய் தரிசன டிக்கெட் 22ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் நாளை 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.   நாள் ஒன்றுக்கு 2000 டிக்கெட் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட் ஒன்று வழங்கப்படும். இந்த நிலையில் இம்மாதம் இரண்டாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

Also see... திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மரணம்.!

சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் நாளை சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது.

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும் டிக்கெட் கட்டணமாக தலா 300 ரூபாயில் செலுத்தி பக்தர்கள் அவற்றை தேவஸ்தானத்தின் இணையதளமான http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Online, Ticket booking, Tirumala Tirupati, Tirupati, Vaikunda ekadasi