திருப்பதி ஏழுமலையானை தரிசக்க நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் மற்றும் இலவச தரிசன டிக்கெட் டோக்கன் நாளை விநியோகிக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உலகப்புகழ்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்தவதற்கு தேவஸ்தானம் தடைவிதித்து இருந்தது. கொரோனா தளர்வுகளை அடுத்து திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனம், கடந்த மாதம் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான டோக்கன்கள், திருப்பதி பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் , சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டது . நாள்தோறும் கொடுக்கப்படும் 8,000 டோக்கன்களுக்காக, அங்கு 30,000 பக்தர்கள் குவிந்து வந்தனர். இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் சூழல் உருவானதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள்
https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இடையூறுகள் இல்லாத வகையில் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக தொழில்நுட்ப வசதியை வழங்கியது.
திருப்பதி ஏழுமலையானை தரிசப்பதற்கான செப்டம்பர் மாத இலவச டோக்கன் ஆன்லைனில் சில மணி நேரங்களில் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளையும், 23ஆம் தேதி நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.