Home /News /spiritual /

திருப்பதி மலையில் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்

திருப்பதி மலையில் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்

திருப்பதி புத்தாண்டு கொண்டாட்டம்

திருப்பதி புத்தாண்டு கொண்டாட்டம்

நள்ளிரவு 12 மணி  ஆனதும் அவர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற பக்தி கோஷம் எழுப்பியும், தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்தும் திருப்பதி திருமலையில் பக்தர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு  2022 ம் ஆண்டு பிறந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பி புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டு தினத்தின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தரகள் வருவது வழக்கம். புத்தாண்டு தினத்தின் இறைவனை தரிசித்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை அதன்படி,  2022 ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று இரவு முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர்.

    நள்ளிரவு 12 மணி  ஆனதும் அவர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற பக்தி கோஷம் எழுப்பியும், தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை பரிமாறியும்  புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன் செய்யப்பட்டு வந்த அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

    இதையும் படிங்க: புத்தாண்டு பலன்கள் 2022 : 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் | ஜோதிடர் காழியூர் நாராயணன் கணிப்பு


    கொரோனா பரவல், அதிகரித்து வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை எடுக்கப்பட்டுள்ளன. எனவே வழக்கத்தின் அடிப்படையில் 3:00 மணிக்கு சுப்ரபாத சேவையில் துவங்கி தொடர்ந்து தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடைபெற்றன.
    அதன் பின் 4 மணி முதல் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி தரிசனம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: மகரவிளக்கு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்... தரிசன நேரம் நீட்டிப்பு

    Published by:Murugesh M
    First published:

    Tags: New Year 2022, New Year Celebration, Tirumala Tirupati

    அடுத்த செய்தி