ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொத்தம் 4டன் மலர்கள்... திருப்பதி திருச்சானூரில் கோலாகமாக நடந்த புஷ்ப யாகம்!

மொத்தம் 4டன் மலர்கள்... திருப்பதி திருச்சானூரில் கோலாகமாக நடந்த புஷ்ப யாகம்!

புஷ்ப யாகம்

புஷ்ப யாகம்

திருப்பதி திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவத்தைத் தொடர்ந்து, பத்மாவதி தாயாருக்கு 4 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வந்த கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது.

இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலை 10.30 மணி முதல் 12 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதையொட்டி பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தேவஸ்தான தோட்டக்கலைத் துறைக்கு நன்கொடையாளர்கள் தமிழகத்தில் இருந்து 2½ டன் மலர்களும், ஆந்திரா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 1½ டன் மலர்களும் வழங்கப்பட்டது. இந்த 4 டன் மலர்களால் பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

முன்னதாக மதியம் 1.30 மணிக்கு ஆஸ்தானமண்டபத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக மலர்களை பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை புஷ்பயாகம் நடைபெற்றது.

ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களையும், மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளிட்ட இலைகளையும் அடுத்தடுத்து வைத்து தாயாருக்கு அர்ச்சகர்கள் புஷ்பயாகம் நடத்தினர்.

கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புஷ்பயாகம்

புஷ்பயாகம்

புஷ்பயாகம்

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati