ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Tirupati : திருப்பதியில் இனி திருபாவைதான் ஒலிக்கும்...

Tirupati : திருப்பதியில் இனி திருபாவைதான் ஒலிக்கும்...

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவைதான் நடைபெறும். கோவிலில் மார்கழி மாத காலம் வரை திருப்பாவை பாராயணம் பாடப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பதியில், மார்கழி மாதம் பிறப்பபையொட்டி, இன்று முதல்  திருப்பாவை பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் தினமும் காலையில் நடைபெறும் சுப்ரபாத சேவை ஒருமாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விஷேசங்களில் முக்கியமான ஒன்றான தனுர்மாத விழா இன்று தொடங்குகிறது. இன்றைய தினம் மதியம் 12.26 மணிக்கு தொடங்கும் தனுர் நாழிகையை முன்னிட்டு நாளை 17-ந் தேதி முதல் நடத்தப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மார்கழி மாதமான தனுர் மாதத்தில் சூரிய உதயத்திற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பு விஷ்ணுவுக்கு சிறப்பு பிரார்த்தனை திருப்பதியில் செய்கின்றனர். மற்றபடி, உச்சிகால பூஜையின் போது மதியத்தில் நடைபெறும் கல்யாண உத்ஸவம், ஊஞ்சல் சேவை, வசந்த உத்ஸவம், சகஸ்ர தீப அலங்காரம் முதலான சேவைகள் வழக்கம் போல் நடைபெறும்.

மேலும் படிக்க... பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சியானது நாளை மார்கழி பிறப்பு துவங்கி, தை மாத பிறப்புக்கு முதல்நாள் வரை சிறப்புற நடைபெறும் என்பது குறிபிடத்தக்கது.

First published:

Tags: Aandal, Margazhi, Tirupathi