Home /News /spiritual /

Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது...

Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது...

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கூடுதல் டிக்கெட்களை வழங்குவது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனம் மூலம் தரிசிக்க 23-ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது...

மேலும் படிக்கவும் ...
    கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த காரணத்தால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை 24-ம் தேதி முதல், இம்மாதம் 28-ம்தேதி வரை தினமும் 13,000 டிக்கெட்டுகள் வீதம் ரூ.300 சிறப்பு தரிசன கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று 23-ம் தேதி காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் தொடங்கியது...

    அதுபோல திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீநிவாசம், கோவிந்தராஜ சுவாமி பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15000 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் 26,27,28-ம்தேதிகளுக்காக கூடுதலாக மேலும் 5000 டோக்கன் என மொத்தம் தினசரி 20,000 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

    மேலும் படிக்க... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

    மேலும், வரும் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு ஆன்லைன் டிக்கெட்டுகள் தினசரி 25,000 வீதம் இன்று 23-ம் தேதி காலை 9 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி