திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 28ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டை இன்று காலை 9 மாணிக்கு வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20,000 வீதம் என இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10,000 டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதனால் பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/ என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.