Home /News /spiritual /

திருப்பதியில் அடுத்தமாதம் தரிசனம் செய்ய திட்டமா...? இதைப் படியுங்கள்..

திருப்பதியில் அடுத்தமாதம் தரிசனம் செய்ய திட்டமா...? இதைப் படியுங்கள்..

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிடும் வழிகாட்டுதல்களை பொறுத்தே, பிரமோற்சவம் குறித்து நிர்வாகம் முடிவெடுக்கும்.

  • News18
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத வழிபாட்டிற்கான, 300 ரூபாய் டிக்கெட்டுகள், இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தேவஸ்தானத்தின் வலைதள பக்கத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 15ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனமும், 18 முதல் 27ம் தேதி வரை பிரமோற்சவமும் நடைபெற உள்ளது. வழக்கமாக இந்நாட்களில் கட்டண தரிசனம் கிடையாது. இலவச தரிசனம் மட்டுமே.

    இந்த ஆண்டு பிரமோற்சவதற்கு பக்தர்களை அனுமதிப்பதா? அல்லது கோயில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் இன்றி திருவிழா நடத்துவதா என்பது குறித்து தேவஸ்தானம் இன்னும் முடிவு செய்யவில்லை. மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிடும் வழிகாட்டுதல்களை பொறுத்தே, பிரமோற்சவம் குறித்து நிர்வாகம் முடிவெடுக்கும்.





    தரிசன டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற வலைத்தள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    Published by:Sankar
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி