• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருப்பதி திருக்குடை உற்சவம் சென்னையில் தொடக்கம்... வரும் 10-ம் தேதி திருமலையில் சமர்ப்பணம்

திருப்பதி திருக்குடை உற்சவம் சென்னையில் தொடக்கம்... வரும் 10-ம் தேதி திருமலையில் சமர்ப்பணம்

திருக்குடை உற்சவம்

திருக்குடை உற்சவம்

திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகளுக்கும், சென்னை கேசவ பெருமாள் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

  • Share this:
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள், தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள் என்று 2 வகையான மங்கலப்பொருட்கள், தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இது பல நுாற்றாண்டு பாரம்பரியம். பெருமாள் எழுந்தருளும்போது, ஆதிசேஷனே திருக்குடையாக அவதரிக்கிறார்.

    திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழக பக்தர்கள் சார்பில், திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு, இந்து தர்மார்த்த சமிதி சார்பில், ஆண்டுதோறும் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடை உற்சவம், கடந்த 3ம் தேதி யாக பூஜைகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில், 11 திருக்குடைகளுக்கும், நேற்று காலை 11 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பெருமாள் கோயில் வளாகத்தில் அணிவகுத்த திருக்குடைகளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இந்த நிகழ்ச்சியில், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, விசுவ இந்து வித்யாகேந்திரா இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணமாச்சாரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், மாநில செயல் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Also Read : சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ஷீரடி கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

    இந்த உற்சவத்தில் பங்கேற்ற, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி, அங்கு எழுந்தருளியிருந்த, ஸ்ரீ பாதங்களுக்கு, திருமலை பிரசாதம் அளித்து மரியாதை செய்தார். பின்னர் திருக்குடைகளை வணங்கினார்.

    வழக்கமாக, சிறப்பு பூஜைகளுக்குப்பின், அன்று மாலை திருக்குடைகள் கவுனி தாண்டும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், 5 நாட்கள் திருக்குடை ஊர்வலம் நடைபெறும். அதை 20 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அரசின் வழிகாட்டி நெறிமுறைப்படி திருக்குடை ஊர்வலம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பூஜைகள் தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள்,இருப்பிடத்தில் இருந்தே திருக்குடைகளை தரிசிக்க, இந்து தர்மார்த்த சமிதி சார்பில், முகநுால், யு-டியூப் சேனலில், திருக்குடை சிறப்பு பூஜைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வரும் அக்.9ம் தேதி, திருச்சானூர் தாயார் கோயிலில் 2 திருக்குடைகளும், அக்டோபர் 10ம் தேதி, திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 திருக்குடைகளையும், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி சமர்ப்பிக்க உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: