முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் இன்று முதல் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் ஆரம்பம்...

திருப்பதியில் இன்று முதல் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் ஆரம்பம்...

தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம்

Tirupati | திருப்பதிமலையில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. கிபி 1468 ம் ஆண்டு முதல் திருப்பதி மலையில் தெப்ப உற்சவம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. காலத்திற்கு தகுந்தாற் போல் தெப்போற்சவம் திருப்பதி மலையில் நடைபெற்றுள்ளது. தெப்போற்சவம் துவக்கப்பட்ட காலத்தில் அப்போது இருந்த வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் சிறிய அளவில் தெப்பத்தை தயார் செய்து இந்த உற்சவத்தை நடத்தி உள்ளனர்.

தற்போது ஏராளமான பொருட் செலவில் மிகவும் நவீன முறையில் மின்சார சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவஸ்தான நிர்வாகம் தெப்போற்சவத்தை நடத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் இன்று மாலை துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்போற்சவத்தின் முதல் நாளான இன்று சீதா தேவி சமேதராக ராமர், லட்சுமணர் ஆகிய உற்சவர்கள் ஆஞ்சநேயருடன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகளாக தெப்பக்குளத்தில் வலம் வந்து தெப்போற்சவம் கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆன நாளை கிருஷ்ணர் ருக்மணி தேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி ஐந்து சுற்றுகளாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

Also see..மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதமாகும்..!

நிறைவு மூன்று நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி ஏழு சுற்றுகளாக தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கு தேவையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. ஐந்து நாட்களும் மாலை 7 மணிக்கு துவங்கி கோவில் தெப்பக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் தெப்போற்சவம் நடைபெறும்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati