சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை 13 மணி நேரம் அடைப்பு

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை 13 மணி நேரம் அடைப்பு
திருப்பதி
  • News18 India
  • Last Updated: December 24, 2019, 11:46 AM IST
  • Share this:
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 13 மணி நேரம் நடை அடைக்கப்பட உள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. வழக்கமாக கிரகணம் ஏற்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாகவே கோவில்களில் நடை அடைக்கப்படும்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.


இதனை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் மூடப்பட உள்ளது. கிரகணத்திற்கு பிறகு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவர்.
 
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading